Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 17 January 2016

இன்றைய புனிதர் 2016-01-17 துறவிகளின் தந்தை பெரிய அந்தோனியார் Antonius der Große

                                              

பிறப்பு250,எகிப்து

இறப்பு356,தபேனிசி Tabenisi, எகிப்து

பாதுகாவல்: நீதிபதிகள். வீட்டுவிலங்குகள், சர்க்கரை ஆலைகள், கூடை நெய்வோர், காலரா நோயிலிருந்து

இவர் தன் இளம் வயதிலேயே தம் பெற்றோரை இழந்தார். இதனால் தன்னுடைய உடன்பிறந்த சகோதரியை கவனிக்கும் பொறுப்பை ஏற்றார். தன் சொத்துக்கள் செல்வங்கள் அனைத் தையும் ஏழைகளுக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு வனத்திற்கு சென்று தவ வாழ்வை வாழ்ந்தார். பாலைவனத்தில் சிறிய இல்லம் ஒன்றை அமைத்து கடுமையான வாழ்வை வாழ்ந்தார். ஏறக்குறைய 20 ஆண்டுகள் காட்டிலும் பாலைவனத்திலும் வாழ்ந்தார். 311 ஆம் ஆண்டு அலெக்சாண்டிரியா அரசன் கிறிஸ் துவை பின்பற்றக்கூடாது என்றிட்ட கட்டளையை எதிர்த்து கிறிஸ்துவ மக்களை காத்து வந்தார். பின்னர் இவர் அரசர் மாக்சிமீனுஸ் தாசா Maciminus Daza என்பவருடன் இணைந்து கிறிஸ்துவ மக்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார். அரசர் மாக்சிமீனுசின் ஆலோசகராகவும் பணியாற்றினார். துறவிகள் பலரின் வாழ்வுக்கு வழிகாட்டினார். இவர் வாழ்ந்த வாழ்க்கையை கண்ட பல இளைஞர்கல் இவரைப் பின்பற்றி குருவானார்கள். இவர் தன்னை பின்பற்றிய மற்ற துறவிக ளையும் பாலைவனத்தில் கதவு இல்லாமல் அமைக்கப்பட்ட குடிசைகளில் வாழ வைத்தார். இவர் தன்னுடன் வாழ்ந்த அனைத்து குருக்களுக்கும் இறைவன் தனக்களித்த அன்பை வாரி வழங்கி தந்தைக்கு தந்தையாய் இருந்தார். தனது துறவி களுக்காக எதிரிகளால் பலமுறை வேதனைக்குட்படுத்தப்பட் டார். தியோக்ளேசியன் என்ற அரசன் கிறிஸ்தவர்களை துன்பு றுத்தியபோது உறுதியுடன் நம்பிக்கை யை அறிக்கையிடுமாறு புனித அந்தோனியார் அவர்களை ஊக்குவித்தார். ஆரியுசின் ஆதரவாளர்களுக்கு எதிராக போராடிய அத்தனாசியுசுக்கு துணை நின்றார்.


செபம்:
எல்லாம் வல்ல ஆண்டவராகிய தந்தையே! பாலைவனத்தில் வியப்புக்குரிய வாழ்க்கை நடத்தி உமக்கு ஊழியம்புரியும் வரத்தை ஆதீனத் தலைவரான புனித அந்தோனியாருக்கு அளித்தீர். இப்புனிதரின் வேண்டுதலால் நாங்கள் எங்களையே ஒறுத்து அனைத்திற்கும் மேலாக உம்மை இடையறாது அன்பு செய்ய அருள்புரியும்.

No comments:

Post a Comment