Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 9 January 2016

இன்றைய புனிதர் 2016-01-10 சபை நிறுவுனர் பிரான்சிஸ்கா சலேசியா லியோனி அவியட் Franziska Salesia Leonie Aviat

                                        

பிறப்பு 16 செப்டம்பர் 1844, சேசான்னே Sezanne, பிரான்சு

இறப்பு10 ஜனவரி 1914,இத்தாலி

முத்திபேறுபட்டம்: 27 செப்டம்பர் 1992, திருத்தந்தை 2 ஆம் ஜான்பவுல்

இவர் தனது இளம் வயதிலிருந்தே துறவியாக வேண்டுமென்று விருப்பம் கொண்டு வளர்ந்தார். இவர் அதிக திறமை இல்லாத வராக இருந்ததால் இவரைப் போன்ற மற்ற பெண்களால் இழி வாக கருதப்பட்டார். எதையும் செய்ய இயலாதவர் என்று ஒது க்கப்பட்டார். அனைவராலும் வெறுக்கப்பட்ட இவர், ஆண்டவ ரின் பார்வையில் உயர்ந்தவராக காணப்பட்டார். இவர் தனது 22 ஆம் வயதில் அருள்தந்தை அலோய்ஸ் ப்ரிசன் Alois Brisson என்பவரை அறிந்து, அவருடன் தன் உறவை வளர்த்து அவரை தன் ஆன்ம குருவாக கொண்டு வாழ்ந்தார்.

இவர் அருள்தந்தை வழங்கிய ஆலோசனையின் பேரில் பல் வேறு விதங்களில் பல ஆன்மீக காரியங்களை திறம்படச் செய்தார். பின்னர் அருள்தந்தை அலோய்சின் உதவியுடன் இத்தாலியில் சாலெசின் புனித பிரான்சுHeiligen Franz von Sales என்ற சபையைத் தொடங்கினார். அதன்பிறகு ஏராளமான முதியோர் இல்லங்களையும் பள்ளிகளையும் உலக அளவி லான பல தொழிற்சாலைகளையும் தொடங்கினார். இவைகள் அனைத்தையும் நிறுவிய ஒரே ஆண்டில் இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளிலும் வெகு விரைவாக பரவியது.

செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! ஒன்றும் இல்லாத லியோனி அவியட்டை உமது ஆசிரால் நிரப்பினீர். பதரான அவரை பயன்படுத்தினீர். அவரின் வழியாக நீர் ஆற்றிய அருஞ்செயல்களை நினைத்து, வியந்து உம்மை போற்றி புகழ்கின்றோம். எம்மையும் நீர் ஆசீர்வதித்து உமது கருவியாய் மாற்றி உம்மை பயன்படுத்தி உமது மாட்சியை இவ்வுலகில் மிளிரிட வழி செய்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment