Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 29 January 2016

இன்றைய புனிதர் 2016-01-30 துறவி ஆடெல்குண்ட் Adelgund OSB

                              

பிறப்பு 630 அல்லது 635

இறப்பு30 ஜனவரி, 694 (?)

பாதுகாவல்: புற்றுநோயிலிருந்து, திடீர் மரணம், குழந்தைகள்

இவர் ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் பெற் றோர் இவரை அரசரின் மகன் எவ்டோ Eudoஎன்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் ஆடெல்குண்ட் அதை விரும்பவில்லை. ஏற்கெனவே தான் கடவுளுடன் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். தன் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்காக மட்டுமே வாழ்வேன் என்பதையும் தெளிவாக தன் பெற்றோரிடம் கூறினார். ஆனால் தன் மகள் கூறியவை எதையும் பெரிதாக கருதாமல் திருமணத் திற்கு ஏற்பாடு செய்தனர். இதையறிந்த ஆடெல்குண்ட் காட்டி ற்கு சென்று குடிசையமைத்து தனிமையாக வாழ்ந்தார். அங் கேயே சிறு ஆலயம் ஒன்றைக் கட்டி செபவாழ்வில் ஈடுபட்டார்.

இதையறிந்த அவரின் பெற்றோர் மனமாறி ஆடெல்குண்டை இறைவனுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ சம்மதித்தனர். அதன்பிறகு அவர் அவ்மொண்ட் Haumont என்ற ஊரிலிருந்த துறவற மடத்திற்கு சென்றார். அங்கு ஆயர் அமாண்டூஸ் அவர்களின் அனுமதி பெற்று, துறவற உடையணிந்தார். பின்னர் சாம்ரே என்ற இடத்தில் துறவற மடம் ஒன்றை நிறுவினார். அம்மடத்தில் இவர்தான் முதல் துறவி. இவர் ஏழைகள் நோயாளிகள் சிறைக்கைதிகள் அனைவருக்கும் காவல்தூதரைப்போல் உடனிருந்து காத்து பராமரித்தார். இவர் பலரின் பாதுகாவலராக இருந்து ஆறுதல் வழங்கி வழிகாட்டினார். இறுதியாக இவர் புற்று நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.


செபம்:
நோய்களை குணமாக்குபவரே எம் இறைவா! நோயாளிகளின் மீது அன்பு கொண்டு, கருணையும் இரக்கமும் காட்டி, தைரியமூட்டி பராமரிக்க எமக்கு வழிகாட்டும் நோயாளிகள், ஒவ்வொருவரும் தங்களின் நோய்களை தாங்கக்கூடிய சக்தியை அளித்து திடமளித்து காத்தருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment