Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 21 January 2016

இன்றைய புனிதர் 2016-01-22 சரகோசா நகர் மறைசாட்சி வின்செண்ட் Vinzenz von Saragossa

                                       

பிறப்பு 3 ஆம் நூற்றாண்டு, ஹூயெஸ்கா Huesca, ஸ்பெயின்

இறப்பு 22 ஜனவரி 304, வாலென்சியா Valencia, ஸ்பெயின்

பாதுகாவல்: சரகோசா மறைமாவட்டம், மீனவர்கள், கட்டிடத் தொழிலாளர்கள்

சரகோசா என்னும் நகரத்து திருச்சபையின் திருத்தொண்டரான வின்செண்ட் தியோக்ளேசியன் கிறிஸ்துவர்களை வாட்டி வதைத்த காலத்தில் வாலன்சியா என்னுமிடத்தில் கொடிய வேதனைகளுக்கு ஆளானார். இருப்பினும் தனது மறைமாவ nட்ட ஆயர் அனுப்பிய கடிதத்தின் பேரில் கிறிஸ்துவுக்காக அனைத்து துன்பங்களையும் பொறுமையுடன் ஏற்றார். தியோக்ளேசியனின் படைவீரர்கள் இவரை மூச்சுவிட முடியாத அளவிற்கு அடித்து உதைத்தனர். உடைந்த கண்ணாடி துண்டு களை கொண்டு உடல் முழுவதையும் குத்திக் கிழித்தனர். இறு தியாக தலை முதல் கால் வரை காயம் உண்டாக்கி இரத்தத்தை வெளியேற்றினர். மரண தருவாயிலும் கடினமான, அளவில்லா வலியை ஏற்படுத்தினர். தோல்களை கூர்மையான ஊசிகொ ண்டு குத்தி கிழித்தனர். தங்களின் விருப்பப்படி அவரை அக்கொ டியவர்கள் துன்புறுத்தியப்பின் கடலில் வீசி கொன்றனர்.

செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! மறைசாட்சியான புனித வின்செண்ட் தம் உடலை வருத்திய வேதனைகளையெ ல்லாம் உள்ளம் நிறைந்த உமது அன்பினால் வென்றார். இறப் பிலும் மேலான வலிமை வாய்ந்த அந்த அன்பை நாங்களும் பெற்றுக்கொள்ள உம்முடைய தூய ஆவியாரால் எங்கள் உள்ளங்களை நிரப்பியருளும்.

No comments:

Post a Comment