Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 14 January 2016
இன்றைய புனிதர் 2016-01-14 மறைப்பணியாளர் போர்டேனோனே நகர் ஓடேரிக் Oderich von Pordenone
பிறப்பு1286,போர்டேனோனே Pordenone, இத்தாலி
இறப்பு14 ஜனவரி 1331,உடினே Udine, இத்தாலி
முத்திபேறுபட்டம்: 1755 திருத்தந்தை 14 ஆம் பெனடிக்ட் இவர் இளம் வயதிலிருந்தே மறைப்பரப்புப் பணியை ஆற்றினார். மெசபத்தோனியா, எகிப்து மற்றும் புனித நாட்டிற்கு சென்று மறைப்பணி புரிந்தார். மற்றும் இந்திய நாட்டிற்கு சென்று அங்கும் மறையை பரப்பினார். இந்திய நாட்டிற்கு கப்பலில் பயணம் செய்த போதும் கடற்கரையில் அமைந்துள்ல ஊர்களிலெல்லாம் பணியாற்றினார். பின்னர் சீனா சென்று பல இன்னல்களின் இடையிலேயும் மனந்தளராமல் பணியாற்றினார். ஏறக்குறைய 17 ஆண்டுகள் மறைப்பணியாற்றிய இவர் ஏராளமான துன்பங்களை அனுபவித்தார். பின்னர் 1331ஆம் ஆண்டு மறைப்பரப்பு நாடுகளிலிருந்து இத்தாலி வந்தடைந்தார்.
தனது தாய் நாடான இத்தாலியிலும் மிகச்சிறந்த முறையில் மறைப்பணியாற்றினார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து தனது உடன்பிறந்த சகோதரரின் உதவியுடன் தான் மேற்கொண்ட அனைத்து பயணங்களைப்பற்றியும் தான் ஆற்றிய பணிகளைப் பற்றியும் விரிவாக எழுதினார். இவர் தனது மறைப்பரப்புப் பணியை ஆற்றுவதற்கு திருத்தந்தை 22 ஆம் யோஹானஸ் உடனிருந்து ஊக்குவித்து உதவினார். மறைப்பணிக்காக தன் உயிரை ஈந்த இவர் தன் பணிகளைப்பற்றி திருத்தந்தையுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது இறந்தார்.
செபம்: இரக்கமே உருவான இறைவா! சென்ற இடமெல்லாம் நன்மை செய்து மறைப்பணியை ஆற்ற பல நல்ல உள்ளங்களை இவ்வுலகிற்கு கொடையாகத் தந்தீர். இன்னல்கள் பலவற்றை சந்தித்தப்போதும் இடைவிடாமல் பணியாற்றிய எம் முன்னோர்களை முன்மாதிரியாக கொண்டு அவர்கள் காட்டிய வழியில் செல்ல நீர் எமக்கு துணையாய் நின்று காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment