Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 14 January 2016

இன்றைய புனிதர் 2016-01-15 துறவி மவ்ரூஸ் Maurus OSB

                                           

பிறப்பு  500

இறப்பு 6 ஆம் நூற்றாண்டு,இத்தாலி

பாதுகாவல்: நோய்களிலிருந்து

இவர் தனது வாழ்நாள் முழுவதும் நூர்சியா நகரிலிருந்த புனித பெனடிக்ட் துறவற சபையினருடன் தொடர்பு கொண்டிருந்தார். உரோமையை ஆட்சி செய்த அரசன் ஒருவரின் மகன், மவ்ரூ ஸிடம் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். அரசரின் மகன் தனது குழந்தை பருவத்திலிருந்தே மவ்ரூஸிடம் வளர்ந்தார். தனது கல்வியையும் மவ்ரூஸிடமே கற்றார். மவுரூஸ் 529 ஆம் ஆண்டு பெனடிக்ட் துறவற மடத்தில் சேர்ந்து குருவானார். மோண்டேகசினோவில்Montedassino இருந்த பெனடிக்ட் துறவற மடத்தில் வாழ்ந்தார். அம்மடம் மிகப் புகழ்வாய்ந்து காணப்பட் டது. அம்மடத்தில் ஒரு சிறிய அறையில் இவர் வாழ்ந்தார். எப்போதும் இடைவிடாமல் செபம் செய்து மிக ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். இவர் உடுத்துவதற்கு கூட தேவையான உடையின்றியும் போதுமான அளவு உணவு உட்கொள்ளாமலும் மிகக் கடினமான வாழ்வை வாழ்ந்தார். இவர் தனது செப வாழ்வைக் கொண்டு, துறவற இல்லம் ஒன்றை கட்டினார். அம்மடம் நாளடைவில் செப இல்லமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

இவர் எவராலும் இயலாத அளவிற்கு கீழ்படிதலான வாழ்வை வாழ்ந்தார். இவருடன் வாழ்ந்த மற்ற குருக்கள் அனைவரும் இவரை ஏழ்மை, கீழ்படிதல் என்னும் வார்த்தைப்பாட்டிற்கு முன் மாதிரியாக கொண்டு வாழ்ந்தனர். இவர் இறந்தபிறகு எங்கு அடக்கம் செய்யப்பட்டார் என்று கண்டறியப்படவில்லை


செபம்:
அதிசயங்களை செய்பவரே எங்கள் ஆண்டவரே! செபிப்பதை மட்டுமே தன் வாழ்வாக கொண்டு, சொல், செயல், சிந்தனைகளில் என்றும் உம்மோடு இணைந்து வாழ்ந்திட எமக்கு உதவி செய்யும். உம்மையே நாங்கள் தாயாகவும் தந்தையாகவும் கொண்டு உமக்கு மட்டுமே வாழ்நாள் முழுவதும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்திட நீர் வரம் தந்தருள் வேண்டுமென்று புனித மவுரூஸ் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment