Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 21 January 2016

இன்றைய புனிதர் 2016-01-21 மறைசாட்சி ஆக்னெஸ் Agnes

                                         

பிறப்பு 3 ஆம் நூற்றாண்டு, உரோம், இத்தாலி

இறப்பு 304 (?), உரோம்

பாதுகாவல்: கன்னிப்பெண்கள், குழந்தைகள், தோட்டக்கலைஞர்கள்

இவர் ஓர் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். சிறந்த கிறிஸ் தவ பெற்றோரால் வளர்க்கப்பட்டார். மிக அழகு வாய்ந்த இவர் பல ஆண்களால் கவரப்பட்டார். இவருக்கு 12 வயது நடக்கும் போதே செம்ப்ரோனியஸ்Sempronius என்ற பெயர் கொண்ட இளைஞருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டார். இதைய றிந்த ஆக்னெஸ் மனமுடைந்து வேதனைக்குள்ளானார். திரு மணம் செய்து கொள்ள மறுத்தார். இயேசுவைப் பற்றிக்கொ ண்டு வாழ்ந்தார். இயேசுவைப் பற்றி எப்போதும் பேசிய வண் ணமாய் இருந்தார். இதனால் செம்ப்ரோனியஸ் வேதனைப் பட்டு நோய்வாய்ப்பட்டார்.
                                                         இதனால் செம்ப்ரோனியசின் தந்தை கோபமடைந்தார். தனது அன்பு மகன் ஆக்னெஸால்தான் நோய் வாய்ப்பட்டார் என்பதை அறிந்தார். இச்சமயத்தில் செம்ப்ரோனி யஸ் திடீரென்று இறந்துவிட்டார். எதிர்பாராத விதமாக இதைய றிந்து அவ்விடத்திற்கு சென்ற ஆக்னெஸ் செம்ப்ரோனியசை தன் செபத்தின் வழியாக இறந்தவரை மீண்டும் உயிர்ப்பெற செய்தார். இந்த அதிசயத்தை கண்ட அனைவரும் வியந்து ஆக்னெசை புனிதையாக கருதினர். அந்நேரம் ஆக்னெசின் உட லில் நெருப்பு கொழுந்துவிட்டெரிந்தது. ஆனால் அவரின் உடல் வேகாமல் இருந்தது.
                                             இவைகளை கண்ட எதிரிகள் ஆக்னெசை பிடித்து கொடுமைப்படுத்தினார். அவரின் கழுத்தை நெரித்துக் கொல்ல திட்டமிட்டனர். இறுதியாக படைவீரர்கள் பலர் அவரை கொடுமைப்படுத்திக் கொன்றனர். இவர் இறந்தபிறகு உரோமையிலுள்ள பொது கல்லறையில் அடக்கம் செய்யப்பட் டார். திருத்தந்தை தாமஸ் இப்புனிதரின் கல்லறையை பாடல் களால் அழகு செய்தார். புனித அம்புரோஸை பின்பற்றி திருச் சபை தந்தையர் பலரும் புகழுரைகளால் இப்புனிதரை பெருமை ப்படுத்தியுள்ளனர்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லவரே! வலியோரை வெட்கப்படுத்த வலுவற்றதென உலகம் கருதுபவற்றை நீர் தேர்ந்து கொள்கிறீர். மறைசாட்சியான புனித ஆக்னெசின் விண்ணக பிறப்பு நாளை கொண்டாடி மகிழும் நாங்கள், நம்பிக்கையில் அவர் கொண்டிருந்த பற்றுறுதியை முன்மாதிரிகையாக கொண்டு வாழ எமக்கு உதவியருள உம்மை இறைஞ்சுகின்றோம்

No comments:

Post a Comment