Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 28 January 2016
இன்றைய புனிதர் 2016-01-29 மறைசாட்சியாளர் அக்குயிலினுஸ் Aquilinus
பிறப்பு 970, வூர்ட்ச்பூர்க் Würzburg, ஜெர்மனி
இறப்பு 1015, மிலான் Milan, இத்தாலி
பாதுகாவல்: சுமை சுமப்பவர்கள்
இவர் கொலோனில் Köln மறைப்பணியாளராக பணிபுரிந்தார் என்று கூறப்படுகின்றது. இவர் தனது மறைப்பணி தொடர்பாக மிலானிற்கு செல்லும்போது கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது. இவரின் உடல் லோரேன்சோ மாகியோரி Lorenzo Maggiore என்றழைக்கப்படும் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று அவ்வாலயம் அக்குயிலினோ என்றழைக்கப்படுகின்றது. சில ஆண்டுகள் கழித்து அவரின் புனித பொருட்கல் வூர்ட்ஸ்பூர்கிற்கு கொண்டுவரப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இவரை பற்றிய மற்ற குறிப்புகள் அதிகம் அறியப்படவில்லை.
செபம்: என்றும் வாழும் தந்தையே! நீரே எம் தேடல், நீரே எம் வாழ்வு. நீரே எமக்கு எல்லாமுமானவர். மறைசாட்சிகளாக இம்மண்ணில் மடியும் ஆன்மாக்களை நீர் நினைவுகூரும். உம் தயவால் விண்ணக வாழ்வில் உமது முடிவில்லா பேரின்பத்தில் பங்குக்கொள்ள துணை செய்யும்.
No comments:
Post a Comment