Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 24 January 2016

இன்றைய புனிதர் 2016-01-24 ஆயர், மறைவல்லுநர், சபை நிறுவுனர் புனித பிரான்சிஸ் சலேசியார் Franz von Sales

                                                                                           

பிறப்பு 21 ஆகஸ்ட் 1567, சவோய் Savoy, பிரான்சு

இறப்பு 28 டிசம்பர் 1622,லியோன் Lyon, பிரான்சு

புனிதர்பட்டம்: 1665
மறைவல்லுநராக: 16 நவம்பர் 1877, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

இவர் 1610 ல் நிறுவிய சலேசிய சபைக்கு பெருமளவில் உடனி ருந்து உதவினார். தமது 43 ஆம் வயதில் ஜெனிவா நகரின் ஆய ராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு இவர் பாரீசிலும் பதுவையிலும் தனது மறைவல்லுநர் படிப்பை பயின்றார். இவர் தனது குருத்துவ பட்டத்தை பெற்றபின் தானாகவே முன்வந்து மறைபணியாளராக பணியாற்ற வேண்டுமென்ற விருப்பத்தை கூறினார். இவர் தனக்கென்று வழங்கப்பட்ட அனைத்து பணிக ளிலும் பொறுமையை கடைப்பிடித்து திறம்படச் செய்தார்.

இவர் மிகச் சிறந்த முறையில் மறையுரை ஆற்றி மக்களை இறைவன் பால் ஈர்த்தார். திருச்சபையின் வளர்ச்சிக்காக இடைவிடாது உழைத்த இவர் பக்கவாத நோயால் தாக்கப்பட்டு இறந்தார். இவர் இறந்த ஓர் ஆண்டு கழித்து 1623 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் பிரான்சு நாட்டிலுள்ள அனெசி என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவர்தான் இறக்கும்வரை தம் சொந்த நாட்டிலேயே கத்தோலிக்கர்களின் வாழ்வு மறுமலர்ச்சிக்கென பல்வேறு பணிகளை ஆற்றினார். இறைமக்கள் நடுவில் உண்மை ஆயராக நடந்து கொண்டு அவர்கள் நம்பிக்கை வாழ்வில் வளரும்படி தமது எழுத்தாலும் பிற பணிகளாலும் துணை புரிந்தார். இறுதிவரை அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து இறந்தார்.


செபம்:
அன்பு நிறைந்த தந்தையே! ஆன்மாக்களை மீட்க ஆயரான புனித பிரான்சிஸ் சலேசியார் எல்லார்க்கும் எல்லாமுமாக இருக்க திருவுளமானீர். நாங்களும் எங்களது பிறரன்பு பணியில் உமது கனிவையும் அன்பையும் பிரதிபலிக்கவும் இந்த புனிதரை நாங்கள் பின்பற்றவும் செய்வீராக, இவைகளையெல்லாம் எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment