Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 20 January 2016

இன்றைய புனிதர் 2016-01-20 மறைசாட்சி செபஸ்தியார் Sebastian

                                            

பிறப்பு3 ஆம் நூற்றாண்டு,மிலான் Milan, இத்தாலி

இறப்பு20 ஜனவரி 288,உரோம், இத்தாலி

பாதுகாவல்: இறக்கும் தருவாயில் உள்ளவர்கள், படைவீரர்கள், கொள்ளை நோயிலிருந்து

இவர் அரசர் காரினுஸ் Carinus என்பவரின் படையில் படைவீர ராக பணியாற்றியவர். இவர் தமது சிறுவயதிலிருந்தே கிறிஸ் தவ நெறிகளில் சிறந்து விளங்கினார். கிறிஸ்தவை பின்பற்று வதில் கண்ணும் கருத்துமாக விளங்கினார். படைவீரர்களில் இருந்த கிறிஸ்தவ தோழர்களுக்கு எல்லாவித உதவிகளையும் செய்து கொடுத்தார். அரசர் காரினுஸ் இறந்தபிறகு தியோக்ளே சியன் அரசர் பதவியை கைப்பற்றினார். தியோக்ளேசியன் கிறி ஸ்துவை பின்பற்றக்கூடாது என்றதொரு கடுமையான கட்ட ளையை பிறப்பித்தான். அவனின் கட்டளையை கடைப்பிடிக்க மறுத்த அனைவரையும் கொன்றான். மிக இளமையான கணவ ரால் கைவிடப்பட்ட இரேனே Irene என்ற பெயர் கொண்ட பெண்  ணை கொடுமையாக கொன்றான். அவனின் அநீத செயல்க ளை கண்ட செபஸ்தியார் அரசனை எதிர்த்து நீதியைக் கேட் டார். இதனால் கோபங்கொண்ட அரசன் இவரை ஓடும் இரயி லில் கட்டி விட்டு கொடுமைப்படுத்தினான். அத்துடன் மற்ற படைவீரர்கலை கொண்டு, பெரிய பெரிய மரக்கட்டைகளை வைத்து அடித்து துன்புறுத்தினான். இறுதியாக அவரை மரத் தில் கட்டி வைத்து அடித்ததுடன் உடலில் அம்பெய்தி கொன்றான்.

கல்லறை சுரங்கம் எனப்படும் இடத்தில் ஆப்பியா Appia என்னும் சாலையில் அமைந்திருக்கும் இப்புனிதரின் கல்லறை தொன்மைக் காலத்து இறைமக்களின் பக்தி வணக்கத்துக்கு ரியதாக இருந்து வருகின்றது


செபம்:
அன்புமிக்க ஆண்டவரே! மறைச்சாட்சியான புனித செபஸ்தியாரின் முன்மாதிரியை நாங்கள் கண்டு பாவித்து மனிதருக்கு கீழ்படிவதைவிட உமக்கே கீழ்படிய திடமனத்தை எங்களுக்கு அளித்தருளும்.

No comments:

Post a Comment