Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 9 January 2016

இன்றைய புனிதர் 2016-01-09 சபை நிறுவுனர் இயேசுவின் மரியா தெரேசா Maria Theresia von Jesus

                                           

பிறப்பு2 பிப்ரவரி 1576,ரேமிரேமோண்ட் Rem

இறப்பு 9 ஜனவரி 1622, நான்சி Nancy, பிரான்சு

புனிதர்பட்டம்: 4 மே 1947 திருத்தந்தை 12 ஆம் பயஸ்

இவர் அலிக்ஸ் லே கிளேர்க் Alix Le Clerc என்ற பெயரால் அழைக்கப்பெற்றார். இவர் துறவிகளால் வளர்க்கப்பட்டார். அவர்களின் பள்ளிகளில் கல்வி கற்றார். பின்னர் இவர் வளர்ந்த பிறகு பல ஆண்டுகள் பல மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். பின்னர் துறவற சபையில் சேர்ந்து துறவியானார். அதன்பிறகு அவரின் துறவறச் சபையில் சபையைக் கண்காணித்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார். இவர் இடைவிடாமல் பணியில் ஈடுபட்டார். பல மணி நேரங்கள் சோர்ந்துவிடாமல் செபத்துடன் கூடி பணிகளை செய்தார்.

இவர் தன் வாழ்வாலும், பணியாலும் எப்போதும் மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். இவர் பல ஆண்டுகள் சிறந்த முறையில் சபையை வழிநடத்திய பின், 1621 ஆம் ஆண்டு இளைய தலைமுறையினரிடம் சபையை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்தார். பின்னர் தன் சக்தியை இழந்தவராய் ஆண்டவரின் பாதம் மட்டுமே அமர்ந்து இடைவிடாமல் செபித்தார். சிறிய வயதிலிருந்து மிகப்பெரிய பணிகளை செய்த இவர் தனது 46 ஆம் வயதில் இறந்தார்.


செபம்:
ஆசீர்வாதங்களை அபரிவிதமாக பொழிபவரே எம் தந்தையே! இயேசுவின் மரிய தெரேசாவிற்கு உம் ஆசிர்வாதங்களை பொழிந்து பணிகள் பலவற்றைச் செய்ய சக்தியை வழங்கினீர். எங்களையும் நிறைவாக ஆசீர்வதித்து, தூய ஆவியால் திடப்படுத்தி, உம் பாதையில் வழிநடந்து, உம்மைப்பற்றி வாழ செய்தருள அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment