Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 15 January 2016
இன்றைய புனிதர் 2016-01-16 ஆர்லஸ் நகர் ஆயர் ஹோனோராடுஸ் Honoratus von Arles
ஹோனோராடூஸ் 410 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டிலுள்ல லேரின்ஸ் தீவில் Lerins Insel மிக அழகானதொரு துறவற இல்லம் ஒன்றை கட்டினார். அவர் கட்டிய அக்கட்டிடத்தில் உள்ள பொருட்களைப்போல, இவ்வுலகம் முழுவதும் தேடியபோதும் அவ்வழகான பொருள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அவ்வில்லமானது புனித ஹோனோராட் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. அத்துறவற இல்லமானது மிக அற்புதமான அழகாக இருந்ததால் உலகின் எப்பகுதியில் வாழும் மக்களும், அதன் அழகைக் கண்டு ரசிக்க சென்றனர். இதனால் அவரே, அவ்வில்லத்தைப்பற்றி எடுத்துரைப்பவராக மாறினார். பின்னர் அவ்வில்லமானது புகழ்வாய்ந்து திகழ்ந்ததால் திருச்சபையின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டது. இவர் அவ்வில்லத்திலேயே தங்கி, இறையியலை கற்றார். மிகச் சிறந்த கலைஞரான இவர் 426 ஆம் ஆண்டு ஆர்லஸ் நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தாம் எழுப்பிய துறவற மடத்திற்கென்று ஒரு சில ஒழுங்குகளை தம் கைப்பட எழுதியுள்ளார். இவர் ஏறக்குறைய 3 ஆண்டுகள் மட்டுமே ஆயராக பணியாற்றினார். இவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து 1788 ஆம் ஆண்டு இவரின் கல்லறை மேல் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment