Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 2 January 2016

இன்றைய புனிதர் 2016-01-03 துறவி ஜெனோவேஃபா Genovefa

                                        

பிறப்பு 422, நாண்டேரே Nanterre, பிரான்சு

இறப்பு 3 ஜனவரி 502, பாரீஸ், பிரான்சு

பாதுகாவல்: பாரீஸ் நகர், பெண்கள், பணம் தொப்பி தயாரிப்பாளர்கள், கொள்ளை நோய்களிலிருந்து

இவர் தன்னுடைய சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார். பெற்றோரின் இறப்பிற்குப்பின், தான் பிறந்த ஊர் முழுவதும் கால்நடையாகச் சென்று செபம் செய்து அனைவரையும் ஆன்மீக வாழ்வில் பயணிக்க வைத்தார். இறைப்பணி செய்வதில் இடைவிடாமல் ஈடுபட்டார். இவர் தனது செபத்தினாலே, பாரீஸ் நகரில் நடந்த போரை நிறுத்தினார் என்று கூறப்படுகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல விதங்களில் உதவி செய்தார். உணவில்லாமல் வாடிய மக்களுக்கு உணவளித்து பசியாற்றினார். இவர் ஏழைகளின் சகோதரி என்றழைக்கப்பட்டார்.

செபம்:
அன்பான இறைவா! ஏழை மக்களுக்கு உதவி செய்ய நீர் உமது ஊழியர்களை ஏற்படுத்தினீர். தொடர்ந்து ஏழைகளின் மீது இரக்கம் கொண்டு, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய நீர்தாமே நல்ல உள்ளங்களை தந்து, வாழ்விற்கு வழிகாட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment