Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 12 January 2016

இறை இரக்க யூபிலி ஆண்டு செபம்

                               
     

              இறை இரக்க யூபிலி ஆண்டு செபம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே விண்ணகத்தந்தையைப் போல‌ நாமும் இரக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என எங்களுக்குக் கற்பித்திருக்கிறீர். அத்துடன் உம்மைக் காண்கின் றவர்கள் அவரையே காண்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கி றீர். உமது முகத்தை எங்களுக்குக் காட்டியருளும். அப்போது நாங்கள் மீட்படைவோம். உமது அன்புப் பார்வை, பணத்துக்கு அடிமைப்பட்டிருந்த சக்கேயுவையும் மத்தேயுவையும் விடுவித் தது. படைப்புகளில் மகிழ்வைத்தேடிய நெறிதவறிய பெண்ணு க்கும் மதேலேனாளுக்கும் விடுதலையைத் தந்தது. உம்மை மறுதலித்த பேதுருவை புலம்பியழவைத்தது. மனம் வருந்திய கள்வனுக்கு மோட்சத்தை உறுதிப்படுத்தியது. ''கடவுளுடைய கொடை எதுவென நீ அறிந்தால்'' என்று சமாரியப்பெண்ணுக்கு நீர் கூறிய வார்த்தையை நீர் எங்களுக்கே சொல்வதாக நாங் கள் கேட்போமாக. கண்ணுக்குத் தெரியாத தந்தையின், அனை த்துக்கும் மேலாக மன்னிப்பின் மூலமும் இரக்கத்தின் மூலமும் தனது வல்லமையை வெளிப்படுத்தும் இறைவனின் கண்ணுக் குத் தெரியும் முகம் நீரே. உயிர்த்து, மகிமைப்படுத்தப்பட்ட‌  ஆண்டவராகிய உம்மை வெளிப்படுத்தும் உமது முகமாக திரு அவை உலகில் விளங்கட்டும். அறியாமையிலும் தவறுகளி லும் இருப்போர் மட்டில் கருணையை உணரும் பொருட்டு உமது திருப்பணியாளர்கள் பலவீனத்தால் அணிசெய்யப்படத்  திருவுளங் கொண்டீர். இவர்களை அணுகும் அனைவரும் தாம் இறைவனால் வேண்டப்படுபவர்கள், அன்பு செய்யப்படுபவர் கள்,  மன்னிக்கப்படுபவர்கள் என்பதை உணரட்டும். இறைவ னின் அருள் நிறைந்த ஆண்டாகக் கருணையின் யூபிலி ஆண்டு மலரவும், புதுப்பிக்கப்பட்ட உற்சாகத்தோடு உமது திரு அவை ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட் டோருக்கும் அடக்கி ஒடுக்கப்பட்டோருக்கும் விடுதலையை அறிவித்து பார்வையற்றோருக்குப் பார்வையைப் பெற்றுத்த ரவும் உமது ஆவியானவரை அனுப்பி எம் ஒவ்வொருவரையும் அருள்பொழிவு செய்தருளும். இதனை எமக்கு அளிக்கும்படி இரக்கத்தின் அன்னையாகிய மரியாளின் பரிந்துரை வழியாக தந்தையோடும் தூய ஆவியோடும் வாழ்ந்து ஆளுகின்ற உம்மை வேண்டுகின்றோம். ஆமென்.

No comments:

Post a Comment