Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 11 January 2016

இன்றைய புனிதர் 2016-01-11 அக்குய்லேயா நகர் பவுலினுஸ் Paulinus von Aquileja

                               

பிறப்பு750,அக்குய்லேயா, இத்தாலி

இறப்பு11 ஜனவரி 802,இத்தாலி

இவர் மிகப் புகழ்வாய்ந்த இலக்கண ஆசிரியராக திகழ்ந்தார். அரசர் பெரிய சார்லஸிற்கு (Karl der Große)அனைத்து விதங்க ளிலும் உதவினார். அவரின் அரசவை சிறந்து, ஆட்சி செழிக்க வழிகாட்டினார். 776 ஆம் ஆண்டு பவுலினுஸ் தன் இருப்பிட த்தை ஆஹன் Aachen என்ற இடத்திற்கு மாற்றிக்கொண்டு, அவ்வூரிலிருந்த கல்லூரிகளில் கற்பித்தார். அச்சமயத்தில் அல்குயின் என்ற அரசருடன் தொடர்புக்கொண்டு, அவரின் நெருங்கிய நண்பரானார். பின்னர் அரசரின் குடும்பத்திலிருந்த அனைவருக்கும் கல்வியைக் கற்றுக்கொடுக்கும் பணியை ஏற்றார். பவுலினுஸ் சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார்.

இவர் அரசரின் உதவியைக் கொண்டு திருச்சபைக்கு பல உதவிகளையும் செய்தார். தம் மறைமாவட்ட ஆயருடன் இணைந்து நற்செய்தியை பறைசாற்றினார். திருச்சபைக்கு எதிராக சதி செய்தவர்களிடம் சுமூகமான உறவு கொண்டு மனமாற்றினார். புனித பத்ரீஸியாரின் சபையில் சேர்ந்து, ஏழ்மையான வாழ்வை வாழ்ந்து, அச்சபையில் பல மாற்றங்களை கொண்டு வர உழைத்தார். தம் சபையை முன்னேற்ற இரவும் பகலும் அயராது உழைத்து தம் சபை சகோதரர்களை இதயத்தில் தாங்கினார்.


செபம்:
அயலாரை நேசிக்க கற்றுத் தந்தவரே எம் தந்தையே! நீர் காட்டிய அன்பின் பாதையில் நாங்கள் பயணிக்க உடனிருந்து வழிகாட்டியருளும். எங்களின் அயலாரை நாங்கள் அன்பு செய்து தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்ய கற்றுத்தாரும். நாங்கள் வாழும் இச்சமுதாயத்தை இதயத்தில் ஏற்று பவுலினுஸ் சென்ற வழியில் செல்ல எம்மை தயாரித்திட வேண்டுமென்று எங்கள் அன்பர் கிறிஸ்து வழியாக உம்மை இறைஞ்சுகின்றோ

No comments:

Post a Comment