Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 17 January 2016

இன்றைய புனிதர் 2016-01-18 ஹங்கேரி நாட்டு துறவி மர்கரேட்டா Margareta von Ungarn OP

                                        

பிறப்பு 1242 (?), கிளிசா Klissa, ஹங்கேரி

இறப்பு 18 ஜனவரி 1270, புடாபெஸ்ட், ஹங்கேரி

முத்திபேறுபட்டம்: 18 ஜனவரி 1270
புனிதர்பட்டம்: 19 நவம்பர் 1943, திருத்தந்தை 12 ஆம் பயஸ்

இவர் ஹங்கேரி நாட்டு அரசர் 4 ஆம் பெலா Bela IV என்பவரின் மகன். அரசரின் மகளாக இருந்தபோதும், தனது குழந்தைப் பருவத்திலிருந்தே அனைத்து ஆடம்பரங்களையும் தவிர்த்து வாழ்ந்தார். தான் ஓர் துறவியாக வேண்டுமென்பதில் மட்டுமே கவனமாக இருந்தார். மர்கரேட்டா தான் விரும்பியவாறு 1254 ஆம் ஆண்டு தனது வார்த்தைப்பாடுகளை பெற்று, புனித தொமினிக்கன் சபையில் துறவியானார். இதனால் இவரின் தந்தை, இவருக்கென்று ஹாசன் தீவில் Haseninsel தொமினிக்கன் துறவற இல்லம் ஒன்றை கட்டித்தந்தார். தற்போது அத்தீவானது மர்கரேட்டா தீவு என்றழைக்கப்படுகின்றது.


இவர் துறவியான பிறகும் கூட அனைத்து வசதிகளையும் தவிர்த்து மிகக் கடுமையான எளிமையான வாழ்வை வாழ்ந்தார். இதனால் குணமாக்க முடியாத அளவிற்கு நோயால் தாக்கப்பட்டார். இருப்பினும் தன்னுடைய வலிகளை ஆண்டவரின் மகிமைக்காக பொறுத்துக்கொண்டு, ஏராளமான ஒறுத்தல்களை புரிந்தார். பிறக்கும்போதே அரசி என்ற பட்டத்துடன் பிறந்த இவர், தன் வாழ்வால் ஆண்டவரின் பார்வையில் உண்மையான அரசியாகவே உயர்த்தப்பட்டார். இவர் இறந்த உடனே, ஹங்கேரி நாட்டு மக்களால் புனிதராக போற்றப்பட்டார்.


செபம்:
நலமளிக்கும் நல்லவரே! அரசியான போதும்கூட அனைத்தையும் துறந்து எளிமையான வாழ்வை ஏற்று, உம்மை பின்பற்றிய மர்கரேட்டாவை நாங்கள் கண்டு பாவிக்கச் செய்தருளும். உலக நாட்டங்களில் மனதை ஈடுபடுத்தாமல் உமது காரியங்களில் ஈடுபட்டு நீர் காட்டும் வழியில் செல்ல எம்மை வழிநடத்தியருள வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment