Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 28 January 2016

இன்றைய புனிதர் 2016-01-28 அக்குயின் நகர் துறவி மறைவல்லுநர் தோமாஸ் Thomas von Aquin

                                     

இன்றைய புனிதர்

2016-01-28

அக்குயின் நகர் துறவி மறைவல்லுநர் தோமாஸ் Thomas von Aquin

பிறப்பு 1225, ரோக்காசெக்கா Roccasecca, இத்தாலி

இறப்பு 7 மார்ச் 1274,போசானுவா Fossanuova, இத்தாலி

புனிதர்பட்டம்: 1323 திருத்தந்தை 12 ஆம் யோஹான்னஸ்
மறைவல்லுநர்பட்டம்: 1567, திருத்தந்தை பயஸ்
பாதுகாவல்: தொமினிக் சபை துறவிகள், கத்தோலிக்க பள்ளிகள், நூலகங்கள், இறையியலாளர்கள், தட்ப வெட்ப நிலை

இவர் ஓர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். இவர் மோந்தோகசி னோ Montho casino மடத்திலும் பின்பு நேயாப்பிலில் Neapel கற்று கற்றார். தனது 18 ஆம் வயதில் தொமினிக்கன் சபையில் சேர் ந்து போலோனியா, கொலோன், பாரீஸ் நகரங்களில் படித்து, தம் படிப்பை முடித்தார். பின்னர் மெய்யியலும் இறையியலி லும் சிறந்த பட்டதாரியாகி ஆழ்ந்த அறிவுடன் பல புத்தகங் களை எழுதினார். பலருக்கு ஆசிரியராக இருந்தார். இவர் தான் இறப்பதற்கு முன் பாரீஸ் மற்றும் கொலோன் மாநகரில் சிறந்த இறையியல் ஆசிரியராக பணியாற்றினார். இவர் சிஸ்டர்சியன் துறவற இல்லத்திற்கு Zisterzienser பயணம் மேற்கொண்டபோது இறந்தார்.

இவர் செல்வந்தராய் பிறந்தபோதும் தான் இறக்கும் வரை அன்பு, நம்பிக்கை, விசுவாசம், வீரம், கற்பு, ஏழ்மை, கீழ்படிதல், சமாதானம், உண்மை, நேர்மை என்பவற்றில் சிறந்து விளங்கினார். இவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து 1369ல் இப்புனிதரின் சடலம் தூலுஸ் Toulous நகருக்கு எடுத்து செல்லப்பட்டது


செபம்:
நேற்றும், இன்றும், என்றும் மாறாத தெய்வமே! புனித அக்குவின் தோமா உம் கொடையால் பெரிய புனிதராகவும் இறையியல் வல்லுனராகவும் திகழ்ந்தார். அவரின் போதனைகளை நாங்கள் உணர்ந்து அவருடைய வாழ்க்கையை கண்டுபாவிக்கவும் எங்களுக்கு அருள்தாரும்

No comments:

Post a Comment