Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 27 January 2016
இன்றைய புனிதர் 2016-01-27 சபை நிறுவுனர் ஆஞ்சலா மெர்சி Angela Merici
பிறப்பு 01 மார்ச் 1474, தெசென்சானோ Desenzano, இத்தாலி
இறப்பு 27 ஜனவரி 1540, பிரேசியா Brescia, இத்தாலி
இவர் 1516 ஆம் ஆண்டிலிருந்து பிரேசியா என்ற ஊரில் வாழ்ந் தார். இவர் எண்ணிலங்கா சமூகப் பணிகளை செய்தார். என்ணி டலங்கா ஏழைமக்களின் வாழ்வை உயர்த்தினார். இவர் 1625 ஆம் ஆண்டு தனது 50 ஆம் வயதில் பாலஸ்தீனாவிற்கு புனிதப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அங்கிருந்து மீண்டும் பிரேசியாவிற்கு திரும்பியதும் பெண்களுக்கென்று நிறுவனம் ஒன்றைக் கட்டினார். அந்நிறுவனத்திற்கு புனித உர்சுலாவை பாதுகாவலராக வைத்தார். பின்னர் அப்பெண்களின் நிறுவனம் வெகுவிரைவாக வளரவே அதை ஓர் துறவறச் சபையாக மாற் றினார். திருத்தந்தை 7 ஆம் கிளமெண்ட் 25 ஆம் நாள் நவம்பர் 1535 ஆம் ஆண்டு அச்சபையை ஓர் நிரந்தரமான துறவற சபை யாக அறிவித்தார். இவர் 1537 ஆம் ஆண்டு அச்சபையின் முதல் சபைத்தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சபையினர் மக்களை கிறிஸ்துவ வழியில் வாழ வழிகாட்டினர். பள்ளி களை நிறுவி ஏழை மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்து கற்றுக் கொடுத்தனர். கைவிடப்பட்ட குழந்தைகளை பராமரித்தனர். சிறப்பாக அச்சபையை வழிநடத்திய இவர் இறந்தபிறகு கண் ணாடி பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டார். இன்றும் அவரின் உடல் அக்கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு மக்க ளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
செபம்: அன்புள்ள ஆண்டவராகிய கடவுளே! கன்னியான புனித ஆஞ்சலா எங்களை உமது அன்பிலும் பராமரிப்பிலும் வைத்து பாதுகாப்பாராக. அன்பும், ஞானமும் மிகுந்த அவருடைய முன்மாதிரியை நாங்கள் பின்பற்றி உம்முடைய போதனைகளை கற்றுக்கொண்டு கைபிடித்து வாழ எங்களுக்கு உம் வரம் தாரும்.
No comments:
Post a Comment