Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 4 January 2016

இன்றைய புனிதர் 2016-01-05 ஆயர் யோஹானஸ் நெப்போமுக் நியூமன் Johannes Nepomuk Newmann CSSR

                                            

பிறப்பு 28 மார்ச் 1811, போமென் Böhmen

இறப்பு5 ஜனவரி 1860,பிலடெல்பியா Philadelphia, அமெரிக்கா

இவரின் தாய் செக் குடியரசு நாட்டு குடிமகள். இவரின் தந்தை ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர். யோஹான்னஸ் தனது இளம் வயது கல்வியை பிராக் நாட்டில் பயின்றார். பின்னர் தாவரவி யலைப் பற்றியும், வானாராய்ச்சிப் பற்றியும் பயின்றார். அதன் பிறகு அமெரிக்கா சென்று மறைப்பரப்புப் பணியை ஆற்றினார். சில ஆண்டுகள் கழித்து நியூயார்க் ஆயர் ஜான் துபோய்ஸ் John Dubois என்பவரால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன் பிறகு நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்று தன் தாய் மொழியான ஜெர்மனியில் போதித்து நற்செய்தியைப் பரப்பினார்.

              பிறகு 1840 ஆம் ஆண்டு அல்போன்ஸ் டி லிகோரி 1732 ஆம் ஆண்டு நிறுவிய துறவறச் சபையில் சேர்ந்தார். அதன்பின் 1852 ஆம் ஆண்டு இவரின் 41 ஆம் வயதில் பிலடெல்பியாவில் ஆய ராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் தனது ஆயர் பதவியை ஏற்ற பின் ஏறக்குறைய 100 ஆலயங்களையும், 80பள்ளிக்கூட ங்களையும் கட்டினார். எட்டு ஆண்டுகள் மட்டுமே ஆயர் பதவி வகித்து பல்வேறு பணிகளை செய்து நற்செய்திக்கு சான்று பகிர்ந்து வாழ்ந்து சாலையோரம் நற்செய்தி போதிக்கொண்டி ருக்கும் வேளையில் இறைவனடி சேர்ந்தார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லவரே! அயல் நாட்டிற்கு சென்று நற்செய்திக்கு சான்று பகர்ந்து வாழ்ந்த புனித யோஹான்னஸ் நெப்போமுக்கை நாங்கள் முன்மாதிரியாக கொண்டு செயல்பட உமதருள் தாரும். இடைவிடாமல் உம் நற்செய்தியை ஆர்வமு டன் ஆற்றி, உம்முன் என்றென்றும் வாழ வரம் தந்தருள வேண் டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment