Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 23 January 2016

இன்றைய புனிதர் 2016-01-23 துறவி திருக்காட்சியாளர் ஹென்றி சோய்சே Heinrich Seuse OP

                                          

பிறப்பு 21 மார்ச் 1295, போடன்சே Bodensee

இறப்பு 25 ஜனவரி 1366,உல்ம் Ulm, ஜெர்மனி

முத்திபேறுபட்டம்: 1831 திருத்தந்தை 16 ஆம் கிரிகோரி

இவர் ஓர் நீதிபதியின் மகன். இவர் இளைஞனாக இருக்கும் போது தன் தாயின் மீது கொண்ட அளவில்லா அன்பால், தன் தாயின் பெயரை தன் பெயராக மாற்றினார். இவர் தனக்கு 13 வயது நடக்கும்போதே தொமினிக்கன் சபையில் சேர்ந்தார். சபையில் சேர்ந்து 5 ஆண்டுகள் கழித்து தனது முதல் திருக்காட் சியை பெற்றார். தனது 40 ஆம் வயது வரை விடாமல் ஆண்டவ ரின் திருக்காட்சியை பெற்றார். ஒவ்வொரு முறையும் திருக்கா ட்சியை பெறும்போது இவரின் இதயத்திலும் மார்பிலும் இரும்பு இறங்கியதை போன்றதொரு கனத்தை உணர்ந்தார். அதன் பிறகு இவர் இயேசுவின் பெயரால் இரும்பு சங்கிலி ஒன்றை தன் கழுத்தில் அணிந்தார். இவர் தன் உடம்பை சில நேரங்க ளில் இரும்புக் கம்பியினாலும் கயிற்றினாலும் அடித்துக் கொண்டார். உணவு, நீர் உட்கொள்ளாமல் பல நாட்கள் வாழ்ந் தார். ஆனால் ஆண்டவர் மீண்டும் மீண்டும் திருக்காட்சியை அளித்து அவரது விசுவாச வாழ்வை மற்றவர்கள் கண்டு பாவி த்து வாழ வேண்டுமென்று தூண்டினார். இவர் 1335 ஆம் ஆண் டிலிருந்து தமது இறப்பு வரை தொமினிக்கன் சபையிலிருந்த அனைத்து குருக்களுக்கும் ஆன்ம வழிகாட்டியாக திகழ்ந்தார். இவர் வாழும்போதே ஆண்டவரின் திருக்காயங்களை தம் உடலில் பெற்றார். இவர் இறந்தபிறகு அவர் வாழ்ந்த தொமினி க்கன் சபையிலிருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.


செபம்:
நற்செயல்களை செய்ய தூண்டுபவரே எம் இறைவா! துறவியும் திருக்காட்சியாளருமான ஹென்றி சோய்சே அவர்களின் பரிந் துரையால் நாங்கள் உம்மில் ஒன்றித்து செய்தருளும். உமது நம்பிக்கையிலும் விசுவாசத்திலும் வேரூன்றி அவரை போல உம்மை பற்றிக்கொண்டு உமக்கு பணிவிடை புரிய வரம் தந்து காத்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழி யாக உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment