Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 5 January 2016

இன்றைய புனிதர் 2016-01-06 பெர்கன் நகர் துறவி வில்ட்ரூட் Wiltrud von Bergen OSB

                                      

பிறப்பு10 ஆம் நூற்றாண்டு--

இறப்பு 6 ஜனவரி 995, பெர்கன் Bergen, பவேரியா Germany

இவர் நொய்பூர்க் Neuburg என்ற ஊரில் டோனவ் Donau நதி யோரம் பெனடிக்டீனர் துறவற இல்லம் ஒன்றை நிறுவினார். இவர் பவேரியா நாட்டு அரசர் பெர்த்ஹோல்டு Berthold என்பவ ருடன் திருமணம் செய்து வாழ்ந்தார். தன் கணவரின் இறப்பிற் குப்பின் அரசர் 2 ஆம் ஓட்டோ Otto II என்பவரின் துணையுடன் தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று துறவற மடங்களை எழுப்பினார். அதன்பிறகு பணம், பொருள், பதவி, சொந்தம் என அனைத்தையும் துறந்து துறவியானார். இறையன்னையின்மீது மிகுந்த பக்தி கொண்டுவாழ்ந்தார். தன் சொந்த முயற்சியால் துறவற மடம் ஒன்றை நிறுவி அதில் தானே தலைமைப் பொறு ப்பேற்று வழி நடத்தினார். தன்னுடன் வாழ்ந்த மற்ற துறவியர் களுக்கு தாய்க்கு தாயாய் இருந்து வழிகாட்டினார்.

செபம்:
அன்பை அளவில்லாமல் வாரி வழங்குபவரே எம் தலைவா! புனித வில்ட்ரூட்டைப் போல எளிமையான வாழ்வை தெரிந்துக் கொள்ள எமக்கு வழிகாட்டும். அன்னையாம் கன்னிமரியாவை எங்களின் தாயாக ஏற்று வாழ வரம் தாரும். அன்னை மரியின் ஆசீரை நாங்கள் என்றும் பெற்று வாழ உமதருள் தந்து காத்திடுமாறு இறைவா உம்மை வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment