Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 31 December 2015

இன்றைய புனிதர் 2015-12-31 குளுனி சபை துறவி ஒடில்லோ Odilo von Cluny OSB

                                               
பிறப்பு 962, அவேர்ஜினே Auvergne, பிரான்சு
இறப்பு 31 டிசம்பர் 1048, சேவிஜ்னி Souvigny, பிரான்சு

இவர் தனது 30 ஆம் வயதில் 991 ஆம் ஆண்டு குளுனி துறவற மடத்தில் சேர்ந்தார். இவர் மிகச் சிறந்த முறையில் பயிற்சி பெற்று மூன்றே ஆண்டுகளில் தலைமைபொறுப்பை ஏற்று அத்துறவற சபையை வழிநடத்தினார். இவர் எப்போதும் தூய ஆவியின் குரலுக்கு செவிசாய்த்து செயல்பட்டார். இவர் தனது சபையை சிறந்த விதத்தில் வளர்த்தெடுத்தார். பல விதங்களில் முயற்சி செய்து பல்வேறு வழிகளில் தன் சபைக் குருக்களை பணியாற்ற ஊக்கமூட்டினார். இவர் பல ஆயர்களையும், திருத்தந்தையர்களையும் வழிநடத்தினார். பல குருக்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவர் தனது பதவிகாலத்தில் ஏறக்குறைய 60 துறவற இல்லங்களை நிறுவினார். அனைத்து குருக்களையும் இறைப்பணியில் வேரூன்றி வாழ வழிகாட்டினார்.


செபம்:
அன்புத் தந்தையே எம் இறைவா! குளுனி சபையின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்து மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய ஒடில்லோவை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம், அச்சபையை தொடர்ந்து ஆசீர்வதித்து வழிநடத்தியருளும். அச்சபையிலுள்ள ஒவ்வொருவரும் உமது மகிமைக்காக செயல்பட்டு உம்மை முன்னிறுத்தி பணியாற்றிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, 30 December 2015

இன்றைய புனிதர் 2015-12-30 மறைசாட்சி ஸ்போலேட்டோ நகர் சபினுஸ் Sabinus von Spoleto

                                          

பிறப்பு3 ஆம் நூற்றாண்டு,இத்தாலி

இறப்பு 303, ஸ்போலேட்டோ, இத்தாலி

பாதுகாவல்: சியென்னா, அசிசி, ஃபெர்மோ Fermo
இவர் மிகச் சிறந்த முறையில் கிறிஸ்துவை பின்பற்றினார். கிறிஸ்துவை பற்றி பல நாடுகளில் போதித்தார். இவர் இத்தாலி நாட்டிலுள்ள அசிசி ஸ்போலேட்டோவில் ஆயராக இருந்தார் என்று கூறப்படுகின்றது. வரலாற்றில் பேசப்படும் அளவிற்கு மிகப் பெரிய அரும் பணிகளை புரிந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. இவரைப்பற்றிய செய்திகள் அதிகம் அறியப்படாத நிலையில் கிறிஸ்துவை பின்பற்றியதற்காக இவர் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது. ஏறக்குறைய 5 ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஸ்போலேட்டோவில் பேராலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பின்னர் ராவென்னா நகரிலும் இவருக்கு பேராலயம் கட்டப்பட்டுள்ளது.


செபம்:
இயேசுவே இறைமகனே! நீர் உம் மக்களை அற்புதமான முறையில் படைத்துள்ளீர். நீர் என்றும் மாறாதவர், உம் அன்பு என்றும் மறையாதது என்பதை இன்றைய புனிதரின் வழியாக வெளிப்படுத்துகின்றீர். உம்மை நாங்கள் எங்கள் வாழ்வின் எச்சூழலிலும் ஏற்று, உமது சாட்சிகளாக வாழ வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Monday, 28 December 2015

இன்றைய புனிதர் 2015-12-29 பேராயர் மறைசாட்சி தோமாஸ் பெக்கெட் Thomas Becket

                                             

பிறப்பு1118,லண்டன், இங்கிலாந்து

இறப்பு29 டிசம்பர் 1170,காண்டர்பரி , இங்கிலாந்து

புனிதர்பட்டம்: 21 பிப்ரவரி 1173, திருத்தந்தை 3 ஆம் அலெக்சாண்டர்

இவர் ஓர் வியாபாரிகள் மகனாகப் பிறந்தார். பாரிஸ் மற்றும் போலோஞ்யாவில் தனது ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை பயின்றார். பின்னர் காண்டர்பரியில் தேயோபால்டு என்ற பெயர் கொண்டு பேராயர் பதவி ஏற்றார். இவரின் 37 ஆம் வயதில் அரசர் 2 ஆம் ஹைன்ரிக் Heinrich என்பவரின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார். இருவருக்குமிடையே நாளடைவில் மிகுந்த நெருக்கம் உண்டானது. அரசர், அரசியல் சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு ஆயர் தோமாஸ் பெருமளவில் உதவினார். பின்பு அரசர் ஆயர் தோமாஸிடம் காண்டர்பரி நகர் முழுவதையும் கண்காணிக்கும்படி வேண்டினார். அதன்பேரில், ஆயர் கிறிஸ்துவ விசுவாசத்தை நாடு முழுவதிலும் பரப்பினார். அரசரின் உதவியுடன் நாடு முழுவதிலுமிருந்த ஏழைகளை ஒன்றாகக் கூட்டி அவர்களுடன் கலந்துரையாடி வேலை வாய்ப்பை வழங்கினார்.

இவர் ஏழை மக்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்வை முன்னேற்ற அம்மக்களை கொண்டு ஆலயங்களை எழுப்பினார். மக்கள் எவ்வித பயமின்றி சுதந்திரமாக வாழ ஏற்பாடு செய்தார். இதனால் அரசன் ஆயரின் நற்செயல்கள் பலவற்றைக் கண்டு பொறாமைக்கொண்டான். மக்கள் தனக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கமாட்டார்கள் என்று உணர்ந்தான். இதனால் ஆயரின் மேல் பொய்க்குற்றம் சுமத்தி தண்டனையாக பணம் செலுத்தும்படி கூறினான். இதனை ஆயர் மறுத்ததால் அவரை அரசன் நாடு கடத்தினான். அவரை ஆயர் பதவியிலிருந்து விலக்குவதற்கு முயன்றார். மக்கள் அரசனின் மூட செயல்களை கண்டு, அரசனுக்கெதிராக எழுந்தனர். இதனால் அரசன் கோபங்கொண்டு போர் தொடர்ந்தான். அரசன் ஆயரை நாடு கடத்தினான். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசன் ஆயரை இங்கிலாந்து நாட்டிற்கு கொண்டு வந்து, கொலைசெய்தான். இவர் இறந்த உடனேயே மக்களால் அவர் புனிதர் என்று புகழப்பட்டார். இறந்த மூன்றே ஆண்டுகளில் ஆயர் தோமாஸ் பெக்கெட் புனிதர்பட்டம் பெற்றார். தான் இறந்த பிறகும் காண்டர்பரி நகர் மக்களுக்கு பல புதுமைகளை செய்து அவர்களை காத்து வழிநடத்தினார். இவைகளை பார்த்த அரசன் 2 ஆம் ஹைன்ரிக்கும் தன் தவற்றை உணர்ந்து மனமாறி முழுமையாக கிறிஸ்துவை பின்பற்றினான்


செபம்:
நாளும் நன்மை செய்பவரே! எம் நண்பரே! காண்டர்பரி மக்கள் விசுவாசத்தில் ஆழப்பட்டு உம்மை ஏற்றுக்கொள்ள ஆயர் தோமாசை இவ்வுலகிற்கு கொடையாக தந்தீர். அந்நகர் மக்களை தொடர்ந்து இவரின் பரிந்துரையால் காத்து வழிநடத்தி நலமான வாழ்வை வழங்கும்படியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2015-12-28 கஸ்பார் டெல் பூஃப்லோ Kaspar del Buflo

                            

பிறப்பு  6 ஜனவரி 1786, உரோம், இத்தாலி

இறப்பு 28 டிசம்பர் 1837, உரோம்

முத்திபேறுபட்டம்: 1905, திருத்தந்தை 10 ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 12 ஜூன் 1954, திருத்தந்தை 12 ஆம் பயஸ்

இவர் உரோம் அரசர் மாளிகையில் பிறந்தார். இவரின் தந்தை அரசர் குடும்பத்தில் சமையல் கலையை ஆற்றிவந்தார். இவ ரின் தாய் குழந்தைகளை கவனித்து அவர்களை சிறந்ததோர் கிறிஸ்துவ நெறியில் வளர்த்தெடுத்தார். கஸ்பார் குழந்தைப்ப ருவத்திலேயே நோயால் தாக்கப்பட்டார். இதனால் மற்ற குழந் தைகளுடன் சேர்ந்து விளையாடுவதிலும், பழகுவதிலும் விரு ப்பமின்றி வாழ்ந்தார். ஆனால் வாய்ப்பு இருக்கும்போதெல் லாம் உரோமில் உள்ள ஆலயங்களுக்கு சென்று செபித்து வந்தார். புனிதர்களின் படத்தை பார்க்கும்போது அவர்களின் வரலாற்றையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். இவர் புனிதர்படங்களை பார்க்கும்போது புனித அலோசியஸ் கொன்சாகா மற்றும் புனித பிரான்சிஸ் சவேரியாரால் ஈர்க் கப்பட்டார். அவர்களை போலவே வாழ வேண்டுமென்று விருப்பம் கொண்டார். அவர்களின் வரலாற்றைப் படித்து தன் வாழ்வை அவர்களை போலவே மாற்றினார். நாளடைவில் இவர் "சிறிய அலோசியஸ்" என்றழைக்கப்பட்டார்.

இவர் தனது கல்வியை உரோமையர்களின் அரசப்பள்ளியில் பயின்றார். கல்லூரியில் படிக்கும்போது மிகத் திறமையுடன் முதல் வகுப்பிலேயே தேர்ச்சி பெற்று வந்தார். அப்போது தான் ஒரு மறைபரப்பு பணியாளராக வேண்டுமென்று விரும்பினார். இதனால் பங்கு ஆலயத்திற்கு சென்று மறையுரை ஆற்றினார். இவரின் மறையுரை மக்கள் மனதில் நெருப்பு பற்றி எரிந்தது. சிறிய அலோசியஸ் அனைவரின் இதயத்தையும் இறைவன்பால் திருப்பினார். இவரின் மறையுரையை கேட்டவர்கள் எவராக இருந்தாலும் மனமாறி இறைவனை பின்செல்லாமல் போகவில்லை. அந்த அளவிற்கு வலிமையான மறையுரைகளை ஆற்றினார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இவரின் மறையுரையை எளிதாகப் புரிந்தனர். இவ்வாறு மறையுரையின் வழியாக அனைவரின் இதயங்களிலும் நீங்கா இடம்பிடித்தார்.

அச்சமயத்தில் 1808 ஆம் ஆண்டு நெப்போலியன் அதிகாரம் உரோமையில் நுழைந்தது. பிரான்சு நாட்டு அரசரால் அப்போதைய திருத்தந்தை எரித்துக்கொல்லப்பட்டார். குருக்களையும் பிடித்து சிறையிலடைத்தனர். அப்போதுதான் இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆனால் இவரும் பிரெஞ்சுக்காரர்களால் சிறைபிடித்து செல்லப்பட்டார். பின்னர் பொலோஞ்யா கொண்டுச் செல்லப்பட்டு வெடி பட்டாசின் நடுவே அமர்த்தப்பட்டு வதைக்கப்பட்டார். பிறகு 1814 ஆம் ஆண்டு நெப்போலியனிடமிருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு மறைபரப்பு பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் திருத்தந்தை அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் இத்தாலி முழுவதும் சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார்.

பின்னர் 1815 ஆம் ஆண்டு திருஇரத்த சபை Missionare vom Kostbaren Blut என்றதோர் சபையை நிறுவினார். இச்சபையினர் ஆரம்ப காலத்தில் மறைபரப்பு பணியையும் ஆன்மீக வழிகாட்டுதலையும் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்ப்பணிகளையும் செய்தனர். பின்னர் உரோம் திரும்பி மீண்டும் மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் இறந்தபிறகு இவரின் கல்லறையில் ஏராளமான புதுமைகள் நடந்தேறிய வண்ணமாக இருந்தது.


செபம்:
வரங்களை பொழிபவரே எம் இறைவா! சிறிய அலோசியஸ் என்றழைக்கப்பட்ட புனித கஸ்பாரை எம் முன்னோர்களுக்கு கொடையாக தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவரை போல இறைபணியில் ஆர்வம் கொண்டு செயல்பட ஒவ்வொரு மறைப்பணியாளர்களுக்கும் ஊக்கமூட்டும். சிறப்பாக குருக்களை நீர் உமது ஆவியின் வரங்களால் நிரப்பும். நீர்தாமே அவர்களின் மறையுரையின் வழியாக மக்களிடம் உம்மை அறிவிக்கச் செய்தருளும். உலக சோதனைகளிலிருந்து விடுபட்டு, உம்மை மட்டுமே பற்றிக்கொண்டு வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று, தந்தை இறைவா உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.

Sunday, 27 December 2015

இன்றைய புனிதர் 2015-12-27 அப்போஸ்தலர், நற்செய்தியாளர் யோவான் Apostel Johannes, Evangelist

                                       

பிறப்பு முதல் நூற்றாண்டு, பெத்சாயிதா Bethsaida

இறப்பு 101, எபேசு Ephesus, துருக்கி

பாதுகாவல்: இறையியலாளர்கள், எழுத்தாளர்கள், நூலகங்கள், அச்சகத்தார், வலிப்பு நோயிலிருந்து

இவர் செபதேயுவின் மகன். சலோமி என்பவர் இவரின் தாய். இவர்கள் கலிலேயா கடற்கரையில் வாழ்ந்தார்கள். இவர் தன் பெற்றோரால் வறுமை தெரியாத அளவிற்கு வளர்க்கப்பட்டார். இவரும் சகோதரர் ஜேம்சும் James, ஜோர்டான் Jordan நதியில் திருமுழுக்கு கொடுத்து, இயேசுவைப்பற்றி பறைசாற்றிக் கொண்டிருக்கும்போது, இயேசு அப்பக்கமாய் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அதை கூர்ந்து கவனித்து "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார். சீடர்கள் இருவரும் இயேசு வை பின் தொடர்ந்தனர். இயேசு அவர்களை திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மை பின்தொடர்வதைக்கண்டு, என்ன தேடுகிறீ ர்கள் என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ரபி, நீர் எங்கே தங்கி இருக்கிறீர்? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் "வந்து பாருங்கள்" என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப்பார்த்து அவரோடு தங்கியிரு ந்தனர்.

              யோவான், இயேசு சென்ற இடமெல்லாம் தானும் உடன் சென்றார். இயேசுவிடமிருந்து நோய்களை குணமாக்கும் வல் லமையை பெற்றார். நாளடைவில் இயேசுவின் அன்பு நண்ப ரானார். இவர் இயேசுவோடு கெத்சமனி தோட்டத்திலும் உட னிருந்தார். பின்னர் இயேசுவின் சாவின்போது அவரின் தாயை தன் தாயாக ஏற்கும் பேற்றை பெற்றார். இயேசு உயிர்த்தெழுந்து கலிலேயா கடற்கரைகளுக்கு சென்று உரையாடியபோது, முத லில் யோவான்தான் இயேசுவை அடையாளம் கண்டார்.

இவர் தனது 69 ஆம் வயதில் எபேசு நகர் சென்று அனைத்து ஆல யங்களையும் கண்காணித்து வந்துள்ளார். 95ஆம் வயதில் அர சன் தொமிசியன் Domitian என்பவரால் கிறிஸ்துவைப் பற்றி அறி வித்ததற்காக பிடிக்கப்பட்டார். அவ்வரசன் அவரை கொதிக்கும் எண்ணெய் பானைக்குள் விட்டு வதைத்துள்ளான். இருப்பினும் யோவான் தன் விசுவாசத்திலிருந்து சிறிதும் மனந்தளரவி ல்லை, இறக்கவுமில்லை. இதனால் அரசன் பயமுற்று கிரேக்க நாட்டு பாட்மோஸ் Patmos என்ற நதியோரத்திற்கு அழைத்துச் சென்று சுட்டெரித்தான். ஆனால் யோவானின் இறைவிசுவாசம் அவரை அழிக்கவிடவில்லை. பின்னர் எபேசு நகரத்திற்கு திரு ம்பி அழைத்துவரப்பட்டார். அரசன் தொமிசியனின் இறப்பிற்கு பிறகு யோவான் எபேசு முழுவதும் நற்செய்தியை பறைசாற்றி அதை எழுதினார். அதன்பின் தனது முதிர்ந்த வயதில் இறந்தார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! திருத்தூதரான புனித யோவான் வழியாக உம்முடைய வார்த்தையின் ஆழ்ந்த மறையுண்மைகளை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினீர். இவர் எமக்கு சிறந்த முறையில் போதித்த உண்மைகளை நாங்கள் போதிய அறிவுத்திறனுடன் புரிந்துகொண்டு உம் வழியில் எம் வாழ்வை வாழச் செய்தருளும்.

Friday, 25 December 2015

இன்றைய புனிதர் 2015-12-25 சிர்மியும் மறைசாட்சி அனஸ்தாஸியா Anastasia von Sirmium

                                          






பிறப்பு 3 ஆம் நூற்றாண்டு, உரோம், இத்தாலி

இறப்பு 304, சிர்மியும் Sirmium, குரோஷியா Kroatien

பாதுகாவல்: தலைவலி, மார்பு நோயிலிருந்து

இவர் ஓர் மதிப்புமிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலேயே திருமணம் செய்து விரைவில் தன் கணவரை இழந்தவர். கணவரின் இறப்பிற்கு பின் நரக வாழ் வை சந்தித்தார். பின்னர் இவர் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்ததால் பகைவர்கள் பெருகினர். இவர் அப்பகைவர்களால் சிறைபிடித்து செல்லப்பட்டார். சிறையிலும் மிகவும் கொடுமை யாக நடத்தப்பட்டார். பலமுறை தீய ஆவியின் செயல்களுக்குட் படுத்தப்பட்டார்.

இவரை அரசன் தியோக்ளேசியன் Diokletians தன் பிடியில் வைத் து, கிறிஸ்துவை பின்பற்றக்கூடாது என்று கட்டளையிட்டான். அதனை எதிர்த்து கிறிஸ்துவை மட்டுமே தன் வாழ்வு என்று உரக்கக்கூறி, இடைவிடாமல் செபித்து வந்தார். இதனால் சினம் கொண்ட அரசன் இவரை உயிருடன் கொல்ல ஆணையிட்டான். இதனால் அனஸ்தாஸியாவை அரச படைவீரர்கள் வெடிமரு ந்தை வைத்து அவரை சுற்றி வெடிக்க வைத்து அவரையும் கொன்றனர்.


செபம்:
கருணையும் இரக்கமும் நிறைந்த எம் இறைவா! பணத்திற்காக கொடியவர்களால் சிறைபிடிக்கப்பட்டு, உம்மை பற்றிக்கொண் டதற்காக உயிருடன் கொல்லப்பட்ட அனஸ்தாசியாவை நினைவுகூறும் இந்நாளில் அவரின் நாமத்தை தாங்கி நாம விழாவைக் கொண்டாடும் உள்ளங்களை ஆசீர்வதியும். நல்ல உடல், உள்ள ஆன்ம நலன்களை தந்து அபரிவிதமாக உம் ஆசீரை பொழிந்து என்றும் உம் சிறகுகளின் நிழலில் வைத்துக் காத்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Thursday, 24 December 2015

இன்றைய புனிதர் 2015-12-24 சபை நிறுவுனர் பவுலா எலிசபெத்து செரியோலி Paula Elisabeth Cerioli

                                           

பிறப்பு16 ஜனவரி 1816, சோன்சினோ Soncino, இத்தாலி

இறப்பு 24 டிசம்பர் 1865, கோமோண்டேComonte, இத்தாலி

முத்திபேறுபட்டம்: 19 மார்ச் 1950, திருத்தந்தை 12 ஆம் பயஸ்

இவர் ஓர் புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்தார். 20 ஆம் வயதில் பணக்காரரின் மகன் ஒருவரை திருமனம் செய்தார். பிறகு மூன்று குழந்தைகளுக்கு தாயாரானார். ஆனால் குழந்தைகள் ஒவ்வொன்றும் பிறந்த உடனேயே மரணத்தைத் தழுவியது, அதன்பிறகு இவரின் கணவரும் தீவிர நோயால் தாக்கப்பட்டு இறந்து போனார். இதனால் தன் உடமைகளில் பாதியை தன்னுடைய உறவினர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். மீதமிருந்தவற்றைக் கொண்டு 1856 ஆம் ஆண்டில் அனாதை மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கென்று ஓர் சபையை உருவாக்கினார்.

இவர் அச்சபையின் முதல் சபைத்தலைவியாக இருந்து வழிநடத்தினார். அச்சபை ஊரைவிட்டு தள்ளி வெளிப்புறமாக மிகுந்த இயற்கை வளத்தோடு இருந்ததால் குழந்தைகள் பள்ளி செல்ல இயலாமல் இருந்தது. இருப்பினும் அங்கேயே பள்ளிக்கூடம் ஒன்றையும் நிறுவி, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் கல்விக்கற்க வைத்தார். இவர் தொடங்கிய அச்சபை திருக்குடும்ப சகோதர சகோதரர்கள் Schwestern und Brüdern von der Heiligen Familie என்று பெயரிடப்பட்டு, 1901 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

செபம்:
தாவீதின் குமாரனே எம் இயேசுவே! நீர் குழந்தைகளை நேசித்ததுபோல, பவுலா எலிசபெத்துக்கும் அவ்வுணர்வுகளை கொடுத்துள்ளீர். இவ்வுலகில் நடக்கும் அநீதிகள் அனைத்திலும் பெருமளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பதை நன்கு அறிவீர். குழந்தைகளுக்கெதிராக செயல்படும் அனைத்து அநீதிகளையும் நீர் தயைகூர்ந்து அகற்றி விடுதலைத் தாரும். ஒவ்வொருவரும் குழந்தைகளின் நலனில் அக்கறைக்கொண்டு செயல்பட்டு, அவர்களின் வழியாக உமது இறையாட்சியை இம்மண்ணில் விதைத்திட ஆசீர் வழங்கி காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, 23 December 2015

இன்றைய புனிதர் 2015-12-23 துறவி ஆஞ்சலா அவுட்ஷ் Angela Autsch

                        

பிறப்பு 26 மார்ச் 1900, ரோலக்கன் Röllecken, ஜெர்மனி

இறப்பு 23 டிசம்பர் 1944, அவுஷ்விட்ஸ் வதை முகாம் Auschwitz, போலந்து

இவர் 27 செப்டம்பர் 1933 ஆம் ஆண்டு தமத்திருத்துவ சபையில் சேர்ந்தார். தனது துறவற வாழ்விற்குத் தேவையான அடிப்படை பயிற்சிகளைப் பெற்று 28 செப்டம்பர் 1938 ஆம் ஆண்டு தனது நிரந்தர வார்த்தைப்பாடுகளை பெற்று துறவியானார். திரு இருதய இயேசுவின் ஆஞ்சலா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இவர் அத்துறவற சபையில் இருந்த வயது முதிர் ந்த துறவிகளை கவனித்துக் கொண்டும் இன்னும் பணிகளில் உதவி தேவைப்படுவோர்க்கும் உடனடியாக சென்று உதவி செய்தும் வந்தார். இவர் ஹிட்லரின் நாசிக்கொள்கையை கடை பிடிக்கும்படி வற்புறுத்தப்பட்டார். ஹிட்லர் தோழர்கள் சிலரால் 12ஆகஸ்ட் 1940 ஆம் ஆண்டு கைதியாகப்பிடிக்கப்பட்டார். பிறகு ராவென்ஸ்பூர்க் Ravensbrück என்ற நகருக்கு நாடு கடத்தப்பட்டது.

இவர் வதைமுகாமில் இருந்தபோதும் கூட தன்னுடன் இருந்தவ ர்களுக்கு இயேசுவின் பெயரால் உதவினார். இறை நம்பிக்கை யிலிருந்து சிறிதும் தளராமல் நாளுக்குநாள் விசுவாசத்தில் வளர்ந்துக்கொண்டே சென்றார். ஏறக்குறைய ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் அவரின் துறவற மடத்திற்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டார். பின்னர் மீண்டும் அவுட்ஷ் Autsch என்ற நகருக்கு பிடித்து செல்லப்பட்டார். 26 மார்ச் 1942 ஆம் ஆண்டு தனது42 ஆம் ஆண்டு பிறந்தநாளை வதைமுகாமில் சிறப்பி த்தார்.

அதன்பிறகு அங்கேயே உணவு தயாரிப்பதற்கும் துணிகளையும் துவைப்பதற்கும் வழங்கப்பட்ட பொறுப்பை ஏற்றார். இவர் தன்னுடன் இருந்த பெண்களுக்கு தன்னால் இயன்ற வரை பலவிதமான உதவிகளை செய்தார். பெண்கள் குளிப்பதற்கான சோப்பையும், சூடான நீரையும் தயாரித்துக்கொடுத்து உதவினார். பசியில் வாடியோர்க்கும் போதுமான உணவை எவரும் அறியாதவண்ணம் கொடுத்து பசியாற்றினார். அதேப்போல் ஹிட்லருக்கு தெரியாமல் உடைகளை சேகரித்து தந்தார். நோயுற்றிருந்த மக்களை வேலை செய்ய விடாமல் தானே அனைத்து பணிகளையும் செய்து நோயாளிகளை காத்தார். இதனால் தான் சிறிதும் ஓய்வு எடுக்காமல் எப்போதும் மற்றவர்களின் நலனையே கருத்தாக கொண்டார்.

இவர் வதைமுகாமில் ஹிட்லரின் பிடியிலிருந்து அனைத்து மக்களாலும் அனைவரையும் காக்க வந்த ஏஞ்சல்(Angel) என்றே புகழப்பட்டார். எப்போதும் புன்முறுவலுடன் உடனிருந்தவர்க ளின் துன்பங்களைப் போக்கினார். இவ்வாறு எல்லோரின் இத யங்களிலும் இடம்பிடித்த ஏஞ்சல் குண்டுமழை வீசப்பட்டதில் சிக்கி இறைவனடி சேர்ந்தார்.


செபம்:
உயிருள்ள இறைவா! நீர் இவ்வுலகில் வாழ்கின்றீர் என்பதை துறவி ஆஞ்சலாவின் வழியாக வெளிப்படுத்தினீர். இத்துறவின் கள்ளங்கபடமற்ற தாராள மனதினை நாங்களும் பெற்று எங் களை சுற்றி உள்ளவர்களுக்கு மனமுவந்து உதவி என்றென் றும் உம்மை இவ்வுலகில் நிலைநாட்டி உம் துணையுடன் செய ல்பட உமதருள் தந்திடுமாறு தந்தையே உம்மை இறைஞ்சுகின் றோம்.

Tuesday, 22 December 2015

இன்றைய புனிதர் 2015-12-22 பிரான்சிஸ்கா சவேரியா கப்ரீனி Franziska Xaviera Cabrini

                                     

                          பிறப்பு15 ஜூலை 1850,
சான் ஆஞ்சலோ லோடிகியனோ Sant Angelo Lodigiano, இத்தாலி

இறப்பு 22 டிசம்பர் 1917, சிகாகோ

முத்திபேறுபட்டம்: 1938
புனிதர்பட்டம்: 7 ஜூலை 1950 திருத்தந்தை 12 ஆம் பயஸ்
பாதுகாவல்: வீட்டு வேலை செய்பவர்கள்

இவர் தனது 24 ஆம் வயதிலேயே பல பொறுப்புகளை ஏற்றி ருந்தார். நோயாளிகளை கவனித்து வந்துள்ளார். பெற்றோரை இழந்த பிள்ளைகளை பராமரித்து வளர்த்துள்ளார். வழிதவறி அலைந்த இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியுள்ளார். விதவை பெண்களை ஒன்று சேர்த்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டியுள்ளார். இவ் வாறு பல பணிகளை செய்த இவர் நீண்ட நாள் தன் மனதில் இருந்த சபை ஒன்றை நிறுவும் ஆசையையும் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இறுதியாக 1880 ஆம் ஆண்டு புனித இதய த்தின் மறைப்பணியாளர்கள் Missionarinnen vom Heiligsten Herzen என்ற சபையை நிறுவினார். இவரே அச்சபையின் முதல் சபை த்தலைவியாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.

                                              இவர் இச்சபையை துவங்கிய ஒரு வருடம் கழித்து, திருத்தந்தை 13 ஆம் லியோ துறவற சபை என்று அறி வித்து, அங்கீகாரம் அளித்தார். மிகப் புகழ் வாய்ந்த மறைப்பரப் பாளர் புனித பிரான்சிஸ் சவேரியாவின் பெயரையும் தன் சபை யின் துணைப் பெயராக வைத்தார். இவர் சபையை தொடங்கிய ப்பின்பும், சபை தனித்து இயங்குவதற்கு தேவையான சில பணி களை நிறைவேற்றாமல் இருந்தார். இருப்பினும் அமெரிக்கா சென்று1888 ல் நியூயார்க்கில் பெரிய துறவற இல்லம் ஒன்றை எழுப்பினார். அங்கு பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் தனித்து செயல்படும் நிறுவனங்கள் பலவற்றையும் நிறுவி னார்.

                                              சிறப்பாக இவர் தாய்நாட்டை விட்டுவிட்டு நில புலன்களை இழந்து உறவென்று சொல்ல யாருமின்றிருந்த மக்களை தன் இதயத்தில் சுமந்து, அம்மக்களுக்கென்று தனி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். இதனால் அந்நாட்டு மக் கள் பலர் இவரின் நற்பணிகளுக்கு உதவ முன் வந்தனர். பின் னர் அவ்வுதவியாளர்கள் பலரின் நட்பைக்கொண்டு, மீண்டும் சிகாகோவில் சபை ஒன்றை நிறுவினார். தற்போது இத்துறவற இல்லமே, அச்சபையின் தலைமையகமாக Generalate செயல் பட்டு வருகின்றது. அதன்பிறகு இச்சபையின் பணிகளால் பல இளம் பெண்கள் கவரப்பட்டு அச்சபைக்கு வந்து சேர்ந்தனர்.

பிரான்சிஸ்கா சவேரியா அத்துறவற மடத்தில் அனைவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டான வாழ்வை வாழ்ந்தார். ஒருநா ளில் 20 மணிநேரம் இயேசுவின் நற்செய்திப்பணியை ஆற்றி னார். மீதமுள்ள நேரங்களில் திவ்விய நற்கருணை ஆராதனை வைத்து நற்கருணை நாதரிடம் செபித்து வந்தார். இதன் பய னாக ஏராளமான பணிகளைச் செய்தார்.


செபம்:
எல்லோர்க்கும் எல்லாமுமானவரே! உம்மிடமிருந்து சக்தியை பெற்று, பல பணிகளை ஆற்றி முழுமையாக உம் நற்செய்திப் பணியில் பங்குகொண்ட புனித பிரான்சிஸ்கா சவேரியாவை நீர் இவ்வுலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியதற்காக உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகின்றோம். அவரின் அருட்து ணையால் அச்சபைத் துறவிகள் மேன்மேலும் வளர்ந்து உம்மை போற்றிப் புகழ்ந்து வாழ வரமருளும்.

Monday, 21 December 2015

இன்றைய புனிதர் 2015-12-21 சபை நிறுவுனர் பீட்டர் ஃபிரீட்ஹோஃபன் Peter Friedhofen

                                       

பிறப்பு 25 பிப்ரவரி 1819, வாலெண்டர் Vallendar, Germany

இறப்பு21 டிசம்பர் 1860,கோப்லென்ஸ் Koblenz, Germany

முத்திபேறுபட்டம்: 23 ஜூன் 1985 திருத்தந்தை 2 ஆம் ஜான்பால்

இவர் வாலண்டர் Vallendar என்ற நகரிலுள்ள வைட்டர்ஸ்பூர்க்கில் Weitersburg புகைப்போக்கியை தூய்மை செய்யும் தொழிலை Schornsteinfeger செய்தார். தினமும் அதிகாலையில் எழுந்து பணியை தொடங்கிச் சென்று பல புதிய மனிதர்களையும், வாழ்க்கை என்றால் என்ன? என்பதையும் தன் அனுபவத்தின் வழியாக கற்றுக்கொண்டார். இவரின் உடன் பிறந்த சகோதரர் இளம் வயதிலேயே இறந்துவிட்டதால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகலை கவனித்துக்கொண்டு அவர்களின் வாழ்விற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். இவர் இளமையாக இருந்தாலும் கூட கிறிஸ்துவின் அப்போஸ்தலிக்க பணியை ஆர்வமுடன் ஆற்றினார். இவர்தான் வாழ்ந்த கிறிஸ்துவ வாழ்வை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.



இவர் பல கத்தோலிக்க பங்குத்தளங்களை உருவாக்கினார். இவர் பல கைவிடப்பட்டவர்களையும், தேவையிலிருப்போரையும், நோயாளிகளையும் இனங்கண்டு முன்வந்து உதவினார். அத்துடன் தன்னுடன் இறை இரக்க சபை சகோதரர்களையும் Barmherzige Brüder இணைத்துக்கொண்டு புதிய சபை ஒன்றை நிறுவினார்.21 ஜூன் 1850 ஆம் ஆண்டு டிரியர் ஆயர் இச்சபையை ஏற்றுக்கொண்டு, ஆசீர்வதித்து அங்கீகாரம் அளித்தார். பிறகு பல இடர்பாடுகளை சந்தித்தப்பிறகு 1851 ஆம் ஆண்டு கோப்லென்சிலும் அச்சபையை நிறுவினார்.

இச்சபையினர் மருத்துவர்களையும் தாதியர்களையும் உருவாக்கி நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இச்சபையின் பணியானது மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று, வளர்ந்து வந்ததால் பல வெளிநாடுகளுக்கு சென்று அச்சபையை வளர்த்தெடுத்தார். பல நாடுகளில் பயணம் செய்த போது, இவர் எலும்புறுக்கி என்ற நோயால் தாக்கப்பட்டார். இதனால் தன் உடலிலிருந்த சக்தியனைத்தையும் இழந்து, மிக மெல்லிய உடலுடன் இறந்தார். இன்று இவர் ஏற்படுத்திய சபையை இறை இரக்க சகோதரர்கள் வழிநடத்தி வருகின்றார்கள். 1888 ஆம் ஆண்டிலிருந்து டிரியர் நகரிலுள்ள சபையே தலைமை இல்லமாக செயல்படுகின்றது.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! தனது உழைப்பால் உயர்ந்து புதிய சபையை உருவாக்கி உம் புகழுக்காகவும் உம் மாட்சியில் பங்கு பெறவும் தன்னை அர்ப்பணித்த பீட்டர் ஃபிரீட்ஹோஃபனை நினைத்து நன்றி கூறுகின்றோம். இவரின் பரிந்துரையால் அவரால் நிறுவப்பட்ட சபையை இனிவரும் நாளிலும் உடனிருந்து காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Saturday, 19 December 2015

இன்றைய புனிதர் 2015-12-20 சிலோஸ் நகர் குரு தொமினிக் Dominikus von Silos OSB

                             

பிறப்பு1010,கானாஸ் Canas, ஸ்பெயின்

இறப்பு 20 டிசம்பர் 1073,சிலோஸ் Silos, ஸ்பெயின்

பாதுகாவல்: கைதிகள், ஆயர்கள்

இவர் 1030 ஆம் ஆண்டு பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்தார். அப்போது அச்சபை குருக்கள் பலர் மறைசாட்சிகளாக மடிந்து கொண்டிருந்தனர். இதனால் இவர் அத்துறவற மடத்தின் தலை வராக பொறுப்பேற்று செயல்பட்டார். 4 வருடங்கள் கானாசில் பணியாற்றியப் பின் தொமினிக் சான் மில்லான் டி லா கொகோலா San Millan de la cogola என்றழைக்கப்பட்ட ஊருக்கு திரும்பினார். அங்கு அரசர் கார்சியா Garcia பேராலயம் ஒன்றை யும் கட்டினார். தொமினிக் அப்பேராலயத்தில் மறைப்பணிக் காக அமர்த்தப்பட்டார். இவர் எப்போதும் நன்றி நிறை மனது டன் அவ்வூர் மக்களிடையே பணியாற்றினார். அதன்பின் 1041 ஆம் ஆண்டு சிலோஸ் சென்று அங்கிருந்த தன் துறவற இல்ல த்தில் தங்கி மறைப்பணியாற்றினார். அங்கு கத்தோலிக்க விசுவாசத்தை பரப்பினார். இவர் பாழடைந்துகிடந்த தன் துற வற இல்லத்தையும் புதுப்பித்தார். இதனால் மக்கள் வெகுண் டெழுந்து வெறிக்கொண்டு அம்மடத்துறவிகள் அனைவரையும் தாக்கினர். இருப்பினும் அவைகளைக் கண்டு அஞ்சாமல் இறை வனின் மகிமைக்காக "ஆராதனை மையம்" என்ற பெயரில் மற்றும் ஒரு இல்லத்தை கட்டினார். அவ்வில்லத்தில் தொமி னிக் 30 ஆண்டுகள் தங்கி பணியாற்றினார். வீழ்ச்சியடைந்து காணப்பட்ட விசுவாச வாழ்விற்கு உரமூட்டி இறை விசுவாச த்தை அம்மண்ணில் தழைக்கச் செய்தார். இதற்காக பல முறை இரத்தம் சிந்தி அடிபட்டு போராடினார். இவர் இறந்தபிறகு அவ் வூர் மக்களாலும் அவர் சபை துறவிகளாலும் ஒரு புனிதருக்கு செய்யப்படும் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.


செபம்:
நீதியின் மன்னரே எம் கிறிஸ்துவே! இன்னல்கள் பல அடை ந்தாலும் சோர்வுறாமல் உம்மில் நம்பிக்கைக்கொண்டு உம் சக்தியை பெற்று விசுவாசத்தை நிலைநாட்டிய இன்றைய புனிதரைப்போல, எங்கல் மீதும் உம் தூய ஆவியை பொழிந்து திடப்படுத்தியருளும். எந்தப் பணியிலும் துணிந்து உழைத்து எழுச்சியை ஏற்படுத்த நீர் துணையாய் உடன் வந்து எம்மை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

இன்றைய புனிதர் 2015-12-19 திருத்தந்தை 5 ஆம் உர்பான் Urban V OSB

                                               

பிறப்பு 1310, கிரிசாக் Grisac, பிரான்சு

இறப்பு 19 டிசம்பர் 1370, அவிஞான் Avignon, பிரான்சு

இவர் குயிலாமே கிரிமோவார்ட் Guillaume Grimoard பெயரால் என்றழைக்கப்பட்டார். இவர் அவிஞான் நகர் திருத்தந்தை என் றும் அழைக்கப்பட்டார். இவர் தன் 52 ஆம் வயதில் அவிஞான் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகக் கடுமை யான செப தவ வாழ்வை வாழ்ந்தார். தன் மறைமாவட்ட மக்க ளையும் சிறந்த எடுத்துக்காட்டான செப வாழ்வை வாழத் தூண் டினார். பல காரணங்களால் இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடு க்கப்பட்டார். இவர் அரசர் 4 ஆம் கார்ல் ஸ்வேபன் நாட்டு பிர்ஜிட்டா Birgitta von Schweben இவர்களுக்கு பல விதங்களில் ஆலோசனை வழங்குபவராகவும் இருந்தார். இவர் தன் இருப்பி டத்தை அவிஞான் நகரில் கொண்டு செயல்பட்டார். இதனால் பலரின் அதிருப்திக்கு ஆளானார். அதன் காரணமாக தன் இருப் பிடத்தை உரோம் நகருக்கு மாற்றினார். 16 அக்டோபர் 1367 ஆம் ஆண்டில்தான் தனது திருத்தந்தை பணியை ரோமில் தொட ங்கினார். அதுவரையிலும் அவிஞான் நகரில் இருந்தவாறே திருச்சபைப் பணிகள் அனைத்தையும் ஆற்றினார்.

                                                            இவர் உரோம் நகருக்கு வந்த பிறகு பலவிதமான வித்தியாசமான பிரச்சனைகளை சந்தித்தார். மக் களிடையே அமைதி சீர்குலைந்தது. பல பிரிவினைகள் ஏற்ப ட்டது. இதனால் திருத்தந்தை மிகவும் வருத்தத்திற்குள்ளாகி வேதனை அடைந்தார். அதன்பின் 1370 ஆம் ஆண்டு, பிரான்சு க்கும் இங்கிலாந்துக்குமிடையே போர் மூண்டது. அச்சமய த்தில் திருத்தந்தை 5 ஆம் உர்பான் மீண்டும் அவிஞான் சென் றார். இவர் அவிஞான் செல்லக்கூடாது என்று ஸ்வேபன் நாட்டு சபை நிறுவினர் பிர்கிட்டா தடுத்தார். இருப்பினும் அனைத்து தடைகளையும் தாண்டி திருத்தந்தை அவிஞான் சென்றவுடன் அங்கேயே மறைசாட்சியாக மடிந்தார். இவர் அங்கேயே அட க்கம் செய்யப்பட்டார். இவரின் கல்லறை மேல் இன்று, புனித விக்டர் என்ற பெயரில் பேராலயம் உள்ளது.


செபம்:
நலன்களை தருபவரே எம் தலைவா! திருத்தந்தை 5 ஆம் உர்பான் வழியாக அவிஞான் என்ற மறைமாவட்டத்தை விசுவாசத்தை விதைத்தீர். உம் அருளால் தொடர்ந்து அம்மக்களை நிரப்பும். அன்று அவர்கள் பெற்ற இறை நம்பிக்கையையும், விசுவாசத்தையும் தொடர்ந்து அவர்களுடையதாக்கி என்றென்றும் உம்முடைய மக்களாக வாழும் பேற்றை அளித்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

Friday, 18 December 2015

இன்றைய புனிதர் 2015-12-18 குரு உன்னிபால்டு Wunibald OSB

                        

பிறப்பு701,வேசெக்ஸ் Wessex, இங்கிலாந்து

இறப்பு 18 டிசம்பர் 761,ஹைடன்ஹைம் Heidenheim, ஜெர்மனி

பாதுகாவல்: கட்டிடத்தொழிலாளிகள், திருமண இணையர்
இவர் ஓர் பக்தியுள்ள கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர். இவ ரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களில் ஒரு சிலர் புனிதர்ப ட்டம் பெற்றுள்ளனர். இவர் ஏறக்குறைய 720 ஆம் ஆண்டு தன் தந்தையுடனும், சகோதரருடனும் உரோம் நகருக்கு திருயாத் திரை சென்றார். பின்னர் அங்கிருந்து புனித நாட்டிற்கு சென் றார். அங்கிருந்து திரும்பி இத்தாலி வந்தடைந்தபோது  தான், தான் ஒரு குருவாக வேண்டுமென்று தந்தையிடம் விருப்ப த்தை தெரிவித்து, இத்தாலி நாட்டிலுள்ள மோண்டேகசினோவி லிருந்த புனித பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் அவரின் மாமா, ஜெர்மனி நாட்டின் அப்போஸ்தலர் என்றழைக் கப்பட்ட போனிபாஸ் விடுத்த அழைப்பின்பேரில் ஜெர்மனி நாட்டிற்கு வந்து சேர்ந்தார்.

இவர் ஜெர்மனியில் 738 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்று, மறைபரப்பு பணிக்காக பவேரியாவிற்கும் தூரிங்கன்Thüringen நாட்டிற்கும் அனுப்பிவைக்கப்பட்டார். அதன்பின் அங்கிருந்து மைன்ஸ் Mainz நகருக்கு திரும்பிவந்து4 ஆண்டுகள் மறைப்ப ணியை ஆற்றினார். அதன்பிறகு 751 அல்லது 752 ஆம் ஆண்டின் இறுதியில் ஐஷ்டாட்டில் Eichstatt இருந்த ஹைடன்ஹைம் என்ற மறைமாவட்டத்தை நிறுவினார். அதன்பிறகு 741 ஆம் ஆண்டு தன் சகோதரர் வில்லிபால்டு Wiilibald ஆயராக இருந்தார். அவர் தான் சில ஆண்டுகள் கழித்து பெனடிக்ட் துறவற சபையை வழிநடத்தினார். பின்னர் அவரின் உதவியுடன் உன்னிபால்டு பெண்களுக்கான பெனடிக்ட் துறவற சபையை வழிநடத்தினார். பிறகு மிகப்பெரிய கலாச்சார மறைபரப்பு பணியகம் ஒன்றை நிறுவி அதையும் தொடர்ந்து வழிநடத்தினார். இவ்வாறு பல்வேறு வழிகளில் மறைபரப்புப்பணியை ஆற்றிய இவர், பெனடிக்ட் துறவற சபையிலேயே இறந்தார். சில ஆண்டுகள் கழித்து இவரின் கல்லறை மேல் ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. இவ்வாலயம் 1483 ஆம் ஆண்டிற்குப் பின் பிறஇன சபைச்சகோ தரர்களின் ஆலயமாக மாற்றப்பட்டது.


செபம்:
அனைவருக்கும் இரக்கம் காட்டும் அன்புத்தந்தையே! அருள்தந்தை உன்னிபால்டை நீர் இவ்வுலகில் படைத்து எமக்கு கொடையாக தந்தீர். இவரின் வழியாக உம் கைவேலைப்பாட்டை மெருகூட்டினீர். புனித பெனடிக்ட் சபையை மேன்மேலும் வளர்த்தெடுத்தீர். இச்சபையின் மூலம், உம் இறைப்பணியை இவ்வுலகில் வாழ வைத்தீர். தொடர்ந்து உமது இரக்கத்தை அச்சபையினர் மீது பொழிந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

Thursday, 17 December 2015

இன்றைய புனிதர் 2015-12-17 மாட்டா நகர் யோவான் Johannes von Matha

பிறப்பு 23 ஜூன் 1160, பவ்கோன் Faucon, பிரான்சு

இறப்பு 17, டிசம்பர் 1213, உரோம், இத்தாலி

பாதுகாவல்: மூவொரு இறைவன் சபை

இவர் பாரிஸ் நகரில் இறையியல் படிப்பைப் பயின்றார். பின்னர் 1185 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஒரு சமயம் இவர் செபித்துக்கொண்டிருக்கும்போது மூவொரு இறைவனைப்பற்றி திருக்காட்சி ஒன்றைக் கண்டார். அத்திருக்காட்சியில் மூவொரு இறைவனுக்கென்று சபை ஒன்றை நிறுவும்படி கூறியதாக உணர்ந்தார். இதனால் 1198 ஆம் ஆண்டு டிசம்பர் தமத்திருத்துவ சபை (மூவொரு இறைவன் சபை) என்றதொரு சபையை மேயாக்ஸ் (Meaux) என்ற மறைமாவட்டத்தில் துவங்கினார். இச்சபையின் ஒழுங்குகளை தயாரித்து அதைப் பின்பற்றுவதற்கு திருத்தந்தை 3 ஆம் இன்னொசெண்ட் பெருமளவில் உதவினார்.

இப்புதிய சபையானது மிக வேகமாக பிரான்சு நாடு முழுவதும் பரவியது. பின்னர் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, போர்த்துக்கல் மற்றும் இங்கிலாந்திலும் அதிவேகமாக பரவியது. இச்சபை குருக்கள் உலகின் எப்பகுதியிலும் இருந்த சிறைக்கைதிகளின் விடுதலைக்காக உழைத்தனர். இப்பணியை செய்வதற்கு ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைப்பெண்கள், அச்சபையில் பணியாளர்களாகச் சேர்ந்தனர். மேலும் அச்சபை சகோதரர்களை நோயாளிகளை கவனிக்கும் பணிக்கும், படைவீரர்களுக்கு ஆன்ம வாழ்வில் வளர்வதற்கு வழிகாட்டுவதற்கும் தயாரித்தார். இச்சபையினர் வெள்ளை அங்கி அணிந்து சிவப்பு நிற சிலுவையை அணிந்து, கருப்பு நிறத்தில் நீளமான உடை உடுத்த வேண்டுமென்று பணித்தார். பல்வேறு விதங்களில் தன் சபையை வளர்த்தெடுத்து, சபைக்கு அங்கீகாரம் பெற்றபின் இறந்தார்.


செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! தமத்திருத்துவ சபையை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அச்சபை சகோதர சகோதரிகளாக நீர் எந்நாளும், எச்சூழலிலும் உடனிருந்து வழிநடத்தும். அச்சபை தொடங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து காலத்தின் சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு, உம் இறையாட்சியில் நிறைவு பெற, உம் அருளையும் ஆசிரையும் தந்து வழிநடத்தும்படியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, 16 December 2015

இன்றைய புனிதர் 2015-12-16 அரசி ஆடெல்ஹைட் Adelheid

பிறப்பு 931, பூர்கண்ட் Burgund, பிரான்சு
இறப்பு 16, டிசம்பர் 999, செல்ஸ் Selz, பிரான்சு

இவர் அரசர் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் 20 ஆம் வயதில் 951 ஆம் ஆண்டு அரசர் முதலாம் ஓட்டோ(Otto) என்பவரை மணந்தார். பின்னர் 962 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் அருளப்பரால் அரசியாக முடிசூட்டப்பட்டார். 973 ஆம் ஆண்டு கணவர் முதலாம் ஒட்டோ இறந்துவிட்டார். இதனால் மகன் 2 ஆம் ஓட்டோவும் அவரின் மனைவியும் அரசர் பொறுப்பை ஏற்றனர். இதனால் அரசி ஆடெல்ஹைட் குடும்ப வாழ்விலிருந்து, சற்று விலகி ஆன்மீக காரியங்களில் கவனம் செலுத்தினார்.

இவர் எண்ணிலடங்கா துறவற மடங்களைக் கட்டினார். குளுனி துறவற மட சட்ட ஒழுங்குகளை சீர்திருத்த தேவையான உதவிகளையும் தாராளமாக செய்து வந்தார். குளுனி மடத்தை (Cluny) பிரான்சு நாடு முழுவதும் பரப்பினார். இவர் திருமணம் செய்தவராக இருந்தபோதும்கூட துறவியைப்போலவே வாழ்ந்தார். இவர் தனது வாழ்நாளின் இறுதிவரை துறவற இல்லத்திலேயே வாழ்ந்து இறந்தார்.


செபம்:
இரக்கமே உருவான இறைவா! அரசி ஆடெல்ஹைடை எமக்கு கொடையாக தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இன்று துறவிகளுக்கெதிராக நடைபெறும் அநீதிகளை அகற்றி, உம் நீதியையும், விசுவாசத்தையும் இவ்வுலகில் நிலை நிறுத்திட நீர்தாமே அருள்புரிய வேண்டுமென்று அரசி ஆடெல்ஹைடின் வழியாக இறைவா உம்மை வேண்டுகின்றோம்.

Tuesday, 15 December 2015

இன்றைய புனிதர் 2015-12-15 சபை நிறுவுனர் யோஹானஸ் ஹைன்றி சார்லஸ் Johannes Heinrich Karl

                              

பிறப்பு 18 டிசம்பர் 1773, தூபிங்கன் Tübingen, ஜெர்மனி

இறப்பு 15 டிசம்பர் 1856, வெரோனா Verona, இத்தாலி

முத்திபேறுபட்டம்: 6 ஜூலை 1975, திருத்தந்தை 6 ஆம் பவுல்

இவர் தனது 19 ஆம் வயதில் திருமுழுக்கு பெற்று கிறிஸ்துவ மறையை தழுவினார். 1796 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள வெரோனாவில் குருப்பட்டம் பெற்றார். பின்னர் இவர் வெரோனாவில் இருந்த குருமட மாணவர்களுக்கு இறையியலை கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றினார். இருந்தபோதும் வெரோனா நகரின் ஆன்மீக குருவாகவும் இவர் பணியாற்றினார். இவர் வெரோனா நகரில் வசித்த ஏழை மக்களின் மேல் தனி அன்பு கொண்டிருந்தார். சிறை கைதிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்படுத்தும் பணியையும் ஆற்றினார்.

இவர் நாள்தோறும் மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து தைரியமூட்டினார். போரினால் பாதிக்கப்பட்ட வாழ்வில் நம்பிக்கையின்றி வாழ்ந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். படைவீரர்களுக்கு அறிவூட்டி தைரியப்படுத்தினார். இவர் வெரோனாவில் பல ஆன்மீக குருக்களை உருவாக்கினார். இவர் 1840 ஆம் ஆண்டு இரக்கத்தின் அருள்சகோதரிகள் என்ற சபையை வெரோனாவில் தொடங்கினார்.


செபம்:
இரக்கமும், கருணையும் நிறைந்த இறைவா! உம் இறைப்பணியை சிறப்புடன் ஆற்றி உம் ஊழியராக திகழ்ந்த இன்றைய புனிதரின் செயல்களை நாங்கள் பின்பற்ற உம் அருள் தாரும். இவரைப்போல நாங்களும் உண்மையுள்ள ஊழியராக வாழ்ந்து உம் பணியில் முழுமையுடன் பங்குகொள்ள உமதருள் தந்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

Monday, 14 December 2015

இன்றைய புனிதர் 2015-12-14 மறைவல்லுநர் திருக்காட்சியாளர் சிலுவை அருளப்பர் Johannes von Kreuz

                                         

பிறப்பு 24 ஜூன் 1542, ஃபொண்டிவேரோஸ் Fontiveros, ஸ்பெயின்

இறப்பு 14 டிசம்பர் 1591, உபேடா Ubeda, ஸ்பெயின்

புனிதர்பட்டம்: 26 டிசம்பர் 1726, திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்
மறைவல்லுநராக: 1926, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

இவரின் தந்தை ஓர் அரசர் குடும்பத்தைச் சார்ந்தவர். ஆனால் அவரின் தாய் ஓர் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர். இதனால் தந்தையும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவராகவே வாழ்ந்தார். அருளப்பர், தன் தந்தை செய்து வந்த கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டு, தன் குடும்பத்திற்கு உதவி செய்து வந்தார். அதன்பிறகு இவர் தாதியர் கல்வியைக் கற்றுக்கொண்டு மெடினா டெல் காம்போ (Medina del Campo) என்ற மருத்துவமனையில் பணியாற்றினார். இவர் தன் பணியின் போது நோயாளிகளின் மேல் அக்கறையும் அன்பும் கொண்டுப்பணியாற்றினார். தான் காட்டிய அன்பாலே பல நோயாளிகள் விரைவில் குணமடைந்தனர்.

இவர் தான் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே, இயேசு சபையில் தத்துவயியலைக் கற்றார். இவர் 1563 ஆம் ஆண்டின் இடையில் இவரின் 21 ஆம் வயதில் மெடினாவில் இருந்த கார்மேல் சபையில் சேர்ந்து புனித மத்தியாசிடமிருந்து சகோதரர் யோஹான்னஸ் என்ற பெயரைப் பெற்றார். இவர் தனது இறையியல் மற்றும் தத்துவயியல் படிப்பை முடித்தபின் சலமான்கா (Salamanca) என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்குதான் அவர் 1568 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு உடனே அவர் அச்சபையிலிருந்து வெளியேறி கர்தாய்சர் (Kartäuser) என்றழைக்கப்படும் துறவற சபையில் சேர்ந்தார். அங்கு அவர் பல விதங்களில் சோதனைக்குப்பட்டார்.

அச்சமயத்தில்தான் அருளப்பர் திருக்காட்சியாளர் அவிலா தெரசாவை சந்தித்தார். அவரின் உதவியாலும் வழிநடத்துதலாலும் தன் சோதனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, சபையின் வளர்ச்சிக்காக உழைத்தார். கடும் உழைப்பாலும் எண்ணற்ற நூல்களாலும் சபை சீர்திருத்தத்திற்கு ஆதரவு அளித்து வந்தார். அப்போது 1582ல் அவிலா தெரசா இறந்து போனதால் சீர்திருத்தப்பணிகள் அனைத்தையும் தனி மனிதனாக இருந்து செய்துவந்தார். பின்னர் 1588 ஆம் ஆண்டு கார்மேல் மடத்தை தனியொரு மடமாக பிரித்து வழிநடத்தினார். அச்சமயத்தில் மிக நோய்வாய்ப்பட்டிருந்த சிலுவை அருளப்பர் தன் சக்தியை இழந்தவராய் இறந்தார்.

இவர் இறந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இவரின் உடல் செகோவியாவிற்கு (Segovia) எடுத்துச் செல்லப்பட்டது. இப்புனிதரின் உடல் இன்று கார்மேல் டெஸ்கால்சோஸ் (Carmelitas Descalzos) என்றழைக்கப்படும் துறவற மடத்தில் வைக்கப்பட்டு, வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இவர் எழுதிய ஆன்மீக நூல்கள் புனித வாழ்விற்கும் அறிவாழத்திற்கும் இன்றும் சான்று பகர்ந்து விளங்குகின்றது


செபம்:
நிறைவாழ்வை வழங்கும் எம் தந்தையே! தம்மை முற்றிலும் ஒறுத்து சிலுவையை நேசித்து வாழும் பேற்றை குருவாகிய சிலுவையின் புனித அருளப்பருக்கு நீர் அளித்தீர். இவருடைய முன்மாதிரியை நாங்கள் கடைபிடித்து உமது முடிவில்லா மாட்சியை கண்டுகளிக்க வரம் தாரும்.

Sunday, 13 December 2015

இன்றைய புனிதர் 2015-12-13 மறைசாட்சி லூசியா

                                       

பிறப்பு 286,சிசிலி Sizilien, இத்தாலி

இறப்பு 304,சிராக்குஸ் Syrakus

பாதுகாவல்: பார்வையற்றோர், நோயுற்ற குழந்தைகள், விவசாயிகள், கண்ணாடி,இரும்பு,கத்தி,கதவு தயாரிப்போர், எழுத்தாளர்கள், வக்கீல், கண்நோயிலிருந்து, கழுத்து வலியிலிருந்து, இரத்தப்போக்கிலிருந்து.

இவர் குழந்தையாக இருக்கும்போது, எவரும் அறியாத வண்ணம் கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை எடுத்துக்கொண்டார். இவரின் இளமைப்பருவத்திலேயே திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். திருமணம் நடக்கவிருந்த அந்நாளில் தன் கற்பை காக்கும்படி இடைவிடாமல் மிக உருக்கமாக செபித்தார். கடவுளும் அவரின் மன்றாட்டை ஏற்று வரமருளினார். அப்போது லூசியாவின் தாய் நோயால் துன்பப்பட்டார். இதனால் லூசியா தன் தாய் குணமடைய வேண்டுமென்று மீண்டும் செபித்து பலனை அடைந்தார்.

இவரின் விசுவாசத்தைக்கண்ட அரசன் தியொக்ளேசியன் லூசியாவை பிடித்துச் சென்று மிரட்டினான். இருப்பினும் லூசியாவின் உதடுகள் மட்டும் செபித்துக்கொண்டே இருந்தது. இதனால் கோபமற்ற அரசன் அவரை வீட்டு விலங்குகளை பராமரிக்கும் கடுமையான பணிகளை கொடுத்தான். அப்போதும் கூட லூசியா தன் பணிகளை மகிழ்ச்சியோடு செய்து பின்னர் தெருவிற்கு சென்று, பார்ப்போரை எல்லாம் தன்னுடன் அழைத்து, செபத்தில் ஆழ்த்தினார். இதனால் கோபமடைந்த அரசன் கொதிக்கும் எண்ணெயை அவரின் மீது ஊற்றினான். அப்போதும் கூட அவரின் உடலில் சிறு காயமும் ஏற்படாமல் கடவுள் அவரை காத்தார். இதனால் அரசன் ஆத்திரமடைந்து, அவரை ஈட்டியால் குத்திக் கொல்லும்படி கட்டளையிட்டான். அவன் கட்டளைப்படி லூசியா ஈட்டிகளின் அம்பிற்கு இரையாகி, மறைசாட்சியாக உயிர்நீத்தார். இவரின் உடல் சிராக்குசில் அடக்கம் செய்யப்பட்டது. பிறகு அவரின் கல்லறை மேல் ஆலயம் கட்டப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.


செபம்:
அன்பான ஆண்டவரே! நீரே எம் அரண்; நீரே எம் கேடயம். நற்செய்தியின் பொருட்டு துன்புறும் மக்களை நீர் நினைவுகூரும். உம் இரக்கத்தை அவர்களின் மீது பொழிந்து காத்தருளும், நீர் கூறும் நற்செய்திகளைக்கேட்டு நாளும் நீர் காட்டும் வழியில் எம் வாழ்வை செலுத்து வழிகாட்டி எம்மை நடத்திட வேண்டுமாய் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

Saturday, 12 December 2015

இன்றைய புனிதர் 2015-12-12 ஒஃபிடா குரு கோன்ராட் Konrad von Offida

                                                    

பிறப்பு 1237,ஒஃபிடா, இத்தாலி

இறப்பு 12 டிசம்பர் 1306, அசிசி, இத்தாலி

இவர் தன் 14 ஆம் வயதில் புனித பிரான்சிஸ் அசிசியின் சபை யை அஸ்கோலி பிசேனோ (Ascoli Piceno)என்ற இடத்தில் நிறுவி னார். இவர் மிக எளிமையான, ஏழ்மையான வாழ்வை வாழ்ந் தார். குடும்ப வாழ்வில் தான் வாழ்ந்த எளிமையை விடாமல் தொடர்ந்து வாழ்ந்தார். இவர் ஊரெங்கும் சென்று வீட்டு வேலை செய்து தன் துறவற சபையை காத்து வந்தார். இவர் பிறந்த ஊரில் 2 ஆம் பிரான்சிஸ் என்றழைக்கப்பட்டார். இவர் சிறப்பாக மறையுரை ஆற்றும் திறமையை பெற்றிருந்தார். வீதி யெங்கும் சென்று மறையுரை ஆற்றினார். அனைத்து மக்களா லும், "சகோதரர்" என்றே அழைக்கப்பட்டார்.
                                                               இவர் 1265 ஆம் ஆண்டு அசிசி நகர் சென்றார். அங்கு போர்சிங்குலா லியோ (Portiancula Leo) வாழ்ந்த ஒரு சிறிய அறையை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து 14 செப்டம்பர் 1224 ஆம் ஆண்டு, புனித பிரான்சிஸ் அசிசி ஐந்து காய வரம் பெற்ற இடத்திற்கு சென்றார். அங்கிருந்த துறவற இல்லத்தில் 15 ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் இளைஞராக இரு ந்த போதிலிருந்தே கிறிஸ்துவின் மீது அளவில்லா ஆர்வம் கொண்டு, அவர் பணியை ஆர்வமுடன் ஆற்றி இடைவிடாமல் இறைவேண்டல் செய்து இறைவனடி சேர்ந்தார்.


செபம்:
ஏழ்மையின் நண்பரே எம் இறைவா! மிக இளம் வயதில் ஏழ் மையான வாழ்வைத் தேடி, உமது சித்தம் ஒன்றையே தன் விருப்பமாகக் கொண்டு வாழ்ந்த கோன்ராடை நாங்கள் முன் மாதிரியாக கொண்டு, இறைவேண்டலில் ஈடுபட எமக்கு ஆர்வ த்தை தாரும். அவர் உம்மை பற்றிக்கொண்டதைப்போல, நாங் களும் உம்மை பற்றி வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று தந்தையே இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

Thursday, 10 December 2015

இன்றைய புனிதர் 2015-12-11 பவேரியா அரசர் 3 ஆம் டாசிலோ Tassilo III, Herzog

                                         

பிறப்பு 730, பவேரியா

இறப்பு 11 டிசம்பர் 800, லோர்ஷ் Lorsch, ஹெசன் Hessen, Germany

இவர் பவேரியாவிலும், டிரோலிலும்(Südtirol) இருந்த பல ஆலய ங்களையும் துறவற மடங்களையும் புதுப்பித்தார். பின்னர் முன்ஸ்டர் மற்றும் ஆஸ்திரியாவிலும் பல துறவற மடங்களை கட்டினார். பின்னர் பவேரியாவிலும் பல துறவற மடங்களை எழுப்பினார். அதன்பின்பு பெனடிக்ட் துறவிகளுக்கென்று பவேரியாவில் முதல் துறவற இல்லம் ஒன்றை கட்டிக்கொடுத் தார். இவரின் அரசப் பதவிக்காலத்தில் பல்வேறு துறவறச் சபை களை பவேரியாவிற்கு வரவழைத்து கிறிஸ்துவ மறையை தழைத்தோங்கச் செய்தார். இவர் தன் வாழ்நாளின் பாதி நாட் கள் துறவற சபைகளில் வாழ்ந்தார். துறவற இல்லங்களுக்கும், குருக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, துறவிப்போலவே வாழ்ந்தார்.

செபம்:
நிலைவாழ்வு வழங்குபவரே! விண்ணுலகிற்குத் தேவையான செல்வங்களை, இம்மண்ணுலகில் சேர்த்து, கிறிஸ்துவ மறை க்கு மெருகூட்டிய அரசர் டாசிலோவைப்போல, நாங்களும் விண்ணக வாழ்விற்கு தேவையான செல்வங்களை சேமித்து, என்றென்றும் உம் மக்களாக வாழும் பேற்றை பெற அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
மறைசாட்சி துறவி ஆர்த்தர் பெல் Arthur Bell OFM

ஹிமேரோட் நகர் திருக்காட்சியாளர் தாவீது David von Himmerod

Wednesday, 9 December 2015

இன்றைய புனிதர் 2015-12-10 மெரிடா நகர் மறைசாட்சி ஓய்லாலியா Eulalia von Merida

                           

பிறப்பு 292, மெரிடா Merida, ஸ்பெயின்

இறப்பு 10 டிசம்பர் 304, மெரிடா

பாதுகாவல்: பயணிகள், விபத்துக்களிலிருந்து

இவர் ஓர் பக்தியுள்ள கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் குழந்தையாக இருக்கும்போதே, சிறந்து வளர்ந்த பெண்ணை ப்போல் காட்சியளித்தார். குழந்தையிலிருந்தே தனிமையாக சென்று செபித்து வந்தார். இப்பிள்ளையை கண்ட அரசன் தியோ க்ளின் செபம் செய்யக்கூடாது என்று அவருக்கு கட்டளையிட் டான். ஆனால் அக்குழந்தை அவனின் தீச்செயலை வெறுத்து மீண்டும் மீண்டும் தனிமையை நாடி செபித்து வந்தது. அனைவ ரும் வியக்கும் விதத்தில் அவரின் செபம் இருந்தது.

                             இவர் தனது 12 ஆம் வயதில் கிறிஸ்துவ மறையை பின்பற்றக்கூடாது என்ற கட்டளையை பெற்றார். அவர் இதை மீறியதால் சிறைப்பிடித்து செல்லப்பட்டார். கொடியவர்கள் அவர்கள் அனைவரையும் விசாரிக்க வந்தபோது, அனைவர் முன்னிலையிலும் "நான் ஓர் கிறிஸ்தவள்" என்று மிக தைரியமாக கூறினாள். இதனால் படைவீரர்கள் இவரை கொண்டு சென்று தனிமையான சிறையில் அடைத்தனர். அவரின் உயிருள்ள உடலின்மேல் இரும்பை காய்ச்சி சூடாக ஊற்றினர். அப்போதும் கூட அவரின் நாவு இறைவனை புகழ்ந்து கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த படைவீரர்கள் அவரை அடுப்பிலிட்டு உயிரோடு எரித்துக்கொன்றனர்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல தந்தையே! குழந்தை பருவத்திலேயே உம்மை இறுகப்பற்றிக்கொண்டு உமக்காக மறைசாட்சியாக மரித்து ஓய்லாலியாப் போல் ஒவ்வொரு குழந்தையும் பக்தியிலும் ஞானத்திலும் சிறந்து வளர உம் தூய ஆவியின் வரம் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2015-12-09 பேதுரு ஃபோரியர் Petrus Fourier

                                               

பிறப்பு 30 நவம்பர் 1565,லோத்ரிங்கன் Lothringen, பிரான்ஸ்

இறப்பு9 டிசம்பர் 1640,கிரே Gray, பிரான்ஸ்

முத்திபேறுபட்டம்: 1730

புனிதர்பட்டம்: 7 மே 1897, திருத்தந்தை 13 ஆம் லியோ

இவர் தனது 20 வயதில் 1589 ஆம் ஆண்டு டிரியரிலுள்ள சிமி யோன் ஆலயத்தில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு தான் பிறந்த ஊரின் பக்கத்து ஊரிலேயே மறை ப்பணிக்காக அனுப்பப்பட்டார். இவர் அவ்வூரில் முதல் திருப் பலி நிறைவேற்றிய போது ஆற்றிய மறையுரையால் பலர் மனந்திரும்பி, உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக மாறினர். இவர் ஊர் ஊராக கால்நடையாகவே சென்று மறைப்பணியா ற்றினார். இவர் குருவான சில ஆண்டுகளிலேயே பல பங்கு களை உருவாக்கினார். ஒவ்வொரு ஊர்களிலும் தவறாமல் திருப்பலியை நிறைவேற்றினார்.
                                                                     இவர் இளைஞர்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் மனதில் இடம்பிடித்தார். இளைஞர்களை பராமரிப்பதற்கென்று 1597 ஆம் ஆண்டு சபை ஒன்றை தொடங்கினார். இச்சபையானது தொடங்கிய 25 ஆண் டுகளில் உலகம் முழுவதும் பரவியது. இச்சபையை திருத் தந்தை 5 ஆம் பவுல் துறவற சபையாக அறிவித்து அங்கீகாரம் அளித்தார். மிக சிறப்பாக பணியாற்றிய இவர் சிறந்த குரு என்றழைக்கப்பட்டு புகழப்பட்டார்.
செபம்:
நன்மைகளின் ஊற்றே எம் இறைவா! பேதுரு ஃபோரியர் சிறந்த குருவாக பணியாற்றி இளைஞர்கலை வளர்த்தெடுத்ததைப் போல எம் குருக்களும் இளைஞர்களின்பால் அக்கறைக்கொ ண்டு வாழ உதவி செய்தருளும். சிறந்த குருக்களாக வாழ்ந்து என்றும் உமக்கு சான்று பகர்ந்திட செய்தருளும்.

Thursday, 3 December 2015

இன்றைய புனிதர் 2015-12-03 மறைப்பணியாளர் பிரான்சிஸ் சவேரியார் Francis Xavier SJ

                                     

பிறப்பு07 ஏப்ரல் 1506,நாவரா Navarra, ஸ்பெயின்

இறப்பு03 டிசம்பர் 1552,சான்சியான் தீவு Sancian, சீனா

முத்திபேறுபட்டம்: 1619, திருத்தந்தை 5 ஆம் பவுல் புனிதர் பட்டம்: 1622, திருத்தந்தை 15 ஆம் கிரகோரி இந்தியாவின் பாது காவலராக: 1904, திருத்தந்தை 10 ஆம் பயஸ் மறைப்போதக நாடுகளின்  பாதுகாவலராக: 1927, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பாதுகாவல்: இந்தியா, கிழக்கு ஆசிய நாடுகள், மறைப்பணி யாளர்கள், கப்பலோட்டிகள், கொள்ளை நோயிலிருந்து

இவர் 1525 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் தனது கல்லூரிப்படிப்பை முடித்தார். அங்குதான் லயோலா நகர் புனிதர் இக்னேசியஸ் (Ignatius Loyola) அவர்களின் நட்பை பெற்றார். 1534 ஆம் ஆண்டு பிரான்சிஸ் சவேரியார் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து புனித மரியன்னையின் முன் தனது வார்த்தைப்பாடுகளை பெற்றனர். பின்னர் 24ஜூன் 1537 ஆம் ஆண்டு வெனிசில் (Venice) தனது குருப்பட்டம் பெற்றார். பிறகு 1538 ஆம் ஆண்டு இக்னேசியஸ் உரோம் நகரில் நிறுவிய இயேசு சபைக்கு உதவினார். அச்சபையானது 27 செப்டம்பர் 1540 ஆம் ஆண்டு திருத்தந்தை 3ஆம் பவுல் அவர்களின் அங்கீகாரம் பெற்றது. இதற்காக சவேரியார் பல பணிகளை செய்து உதவினார். அதன்பிறகு 1541 ஆம் ஆண்டு ஏபர்ல் 7ஆம் நாள் தனது 35 ஆம் வயதில் மறைபரப்பு பணிக்காக இந்தியாவை நோக்கி பயணம் செய்தார்.

இவர் 13 மாதங்கள் கப்பலில் பயணம் செய்து கோவாவை அடைந்தார். அங்கு அவர் 2 ஆண்டுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மக்களிடையே வேலை செய்து மறைப்பணியாற்றினார். 1544 ஆம் ஆண்டில் ஒரு சில மாதங்களில் ஏறக்குறைய 10,000 மீனவர்களை மனமாற்றி திருமுழுக்கு கொடுத்தார். 1545 ஆம் ஆண்டு சென்னையை நோக்கி பயணம் செய்து, பின்னர் மலாக்கா தீவை (Malakka) அடைந்தார். அவர் சென்ற இடமெல்லாம் மொழியை கற்றுக்கொண்டு, மறைப்பணியாற்றி திருமுழுக்கு கொடுத்து மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றினார். அச்சமயத்தில், தான் ஆற்றும் பணிகளை குறித்து ரோமிற்கு கடிதம் ஒன்றையும் எழுதினார். இவர் ஏறக்குறைய 1500 மடல்கள் எழுதியுள்ளார்.

அதன்பிறகு 1547ஆம் ஆண்டில் மலாக்கா தீவிலிருந்து மறைப்பரப்புப்பணிக்காக ஜப்பான் நோக்கி பயணம் செய்தார். அங்கும் 100 க்கும் மேற்பட்ட மக்களுக்கு திருமுழுக்குக்கொடுத்து திருமறையை பரப்பினார்.1550ஆம் ஆண்டு தன்னுடன் சில இயேசு சபை மறைப்பணியாளர்களை அழைத்து கொண்டு ஜப்பானில் மியாக்கோ (Miyako) என்ற இடத்திற்கு கால்நடையாகவே நடந்து சென்று மறைப்பணியாற்றினார். அங்கு அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மீண்டும் 1551ல் இந்தியாவை நோக்கி பயணமானார். அப்போது தான் இவர் இந்தியாவில் நிறுவிய சபைகளுக்குத் தலைவர் பொறுப்பை ஏற்கும் செய்தியை கேட்டார். இந்தியாவை அடைந்து சிலகாலம் பணியாற்றியபின் சீனாவிலும், மறைப்பணி ஆற்றவேண்டுமென்ற பேராவலில் தனது 46வது பிறந்தநாளை 1552 ஆம் ஆண்டு சிறப்பித்த பின் சீனாவை நோக்கி பயணம் செய்தார்.

அப்போது சான்சியான் தீவை அடைந்தார். அங்குதான் போர்த்துக்கீசியர்களும் சீன வியாபாரிகளும் சந்தித்தனர். அவர். அம்மக்களிடையே அவ்விடத்தில் மறைப்பணியாற்றினார். அங்கு சிலர் இவருக்கெதிராக செயல்பட்டனர். இதனால் அவர் அம்மக்களால் பிடிபட்டார். ஏராளமான இடங்களில் மறைப்பணியாற்றிய சவேரியார் உடல் நோயால் பாதிக்கப்பட்டு தன் சக்தியை இழந்தார். பணி செய்ய முடியாத நிலையில் மக்களின் இதயங்களில் இடம் பிடித்து நற்பணியாற்றினார். அனைவரும் இவரைக் கண்டு வியக்கும் விதத்தில் இறைவனடி சேர்ந்தார். இவரின் உடல் இயேசு சபையினரால் எடுத்துச் செல்லப்பட்டு கோவாவில் வைக்கப்பட்டது. இன்று வரை அழியாமல் உள்ள இவரின் உடலை உலகின் பல பகுதி மக்களுக்கும் கோவா சென்று அவரை தரிசித்து புதுமைகளை பெற்று வருகின்றனர்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! புனித பிரான்சிஸ் சவேரியாரின் போதனையால் விசுவாசத்தின்மீது இவர் கொண்டிருந்த அதே ஆர்வத்தை எங்களுக்கும் தந்தருளும். உம் திருச்சபை இவ்வுலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவுவதைக் கண்டு மகிழ்கின்றோம். இந்திய நாட்டில் உம் விசுவாசம் ஓங்கி வளர்ந்து, உம் நம்பிக்கையை பரப்ப மேன்மேலும் எமக்கு உதவி செய்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இவர் 13 மாதங்கள் கப்பலில் பயணம் செய்து கோவாவை அடைந்தார். அங்கு அவர் 2 ஆண்டுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மக்களிடையே வேலை செய்து மறைப்பணியாற்றினார். 1544 ஆம் ஆண்டில் ஒரு சில மாதங்களில் ஏறக்குறைய 10,000 மீனவர்களை மனமாற்றி திருமுழுக்கு கொடுத்தார். 1545 ஆம் ஆண்டு சென்னையை நோக்கி பயணம் செய்து, பின்னர் மலாக்கா தீவை (Malakka) அடைந்தார். அவர் சென்ற இடமெல்லாம் மொழியை கற்றுக்கொண்டு, மறைப்பணியாற்றி திருமுழுக்கு கொடுத்து மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றினார். அச்சமயத்தில், தான் ஆற்றும் பணிகளை குறித்து ரோமிற்கு கடிதம் ஒன்றையும் எழுதினார். இவர் ஏறக்குறைய 1500 மடல்கள் எழுதியுள்ளார்.

அதன்பிறகு 1547ஆம் ஆண்டில் மலாக்கா தீவிலிருந்து மறைப்பரப்புப்பணிக்காக ஜப்பான் நோக்கி பயணம் செய்தார். அங்கும் 100 க்கும் மேற்பட்ட மக்களுக்கு திருமுழுக்குக்கொடுத்து திருமறையை பரப்பினார்.1550ஆம் ஆண்டு தன்னுடன் சில இயேசு சபை மறைப்பணியாளர்களை அழைத்து கொண்டு ஜப்பானில் மியாக்கோ (Miyako) என்ற இடத்திற்கு கால்நடையாகவே நடந்து சென்று மறைப்பணியாற்றினார். அங்கு அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மீண்டும் 1551ல் இந்தியாவை நோக்கி பயணமானார். அப்போது தான் இவர் இந்தியாவில் நிறுவிய சபைகளுக்குத் தலைவர் பொறுப்பை ஏற்கும் செய்தியை கேட்டார். இந்தியாவை அடைந்து சிலகாலம் பணியாற்றியபின் சீனாவிலும், மறைப்பணி ஆற்றவேண்டுமென்ற பேராவலில் தனது 46வது பிறந்தநாளை 1552 ஆம் ஆண்டு சிறப்பித்த பின் சீனாவை நோக்கி பயணம் செய்தார்.

அப்போது சான்சியான் தீவை அடைந்தார். அங்குதான் போர்த்துக்கீசியர்களும் சீன வியாபாரிகளும் சந்தித்தனர். அவர். அம்மக்களிடையே அவ்விடத்தில் மறைப்பணியாற்றினார். அங்கு சிலர் இவருக்கெதிராக செயல்பட்டனர். இதனால் அவர் அம்மக்களால் பிடிபட்டார். ஏராளமான இடங்களில் மறைப்பணியாற்றிய சவேரியார் உடல் நோயால் பாதிக்கப்பட்டு தன் சக்தியை இழந்தார். பணி செய்ய முடியாத நிலையில் மக்களின் இதயங்களில் இடம் பிடித்து நற்பணியாற்றினார். அனைவரும் இவரைக் கண்டு வியக்கும் விதத்தில் இறைவனடி சேர்ந்தார். இவரின் உடல் இயேசு சபையினரால் எடுத்துச் செல்லப்பட்டு கோவாவில் வைக்கப்பட்டது. இன்று வரை அழியாமல் உள்ள இவரின் உடலை உலகின் பல பகுதி மக்களுக்கும் கோவா சென்று அவரை தரிசித்து புதுமைகளை பெற்று வருகின்றனர்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! புனித பிரான்சிஸ் சவேரியாரின் போதனையால் விசுவாசத்தின்மீது இவர் கொண்டிருந்த அதே ஆர்வத்தை எங்களுக்கும் தந்தருளும். உம் திருச்சபை இவ்வுலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவுவதைக் கண்டு மகிழ்கின்றோம். இந்திய நாட்டில் உம் விசுவாசம் ஓங்கி வளர்ந்து, உம் நம்பிக்கையை பரப்ப மேன்மேலும் எமக்கு உதவி செய்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Tuesday, 1 December 2015

இன்றைய புனிதர் 2015-12-02 துறவி ஆஞ்சலா அஸ்டோர்க் Angela Astorch

                                         

பிறப்பு01 செப்டம்பர் 1592,பார்சிலோனா Barcelona, ஸ்பெயின்

இறப்பு02 டிசம்பர் 1665,முர்சியா Murcia, ஸ்பெயின்

முத்திபேறுபட்டம்: 25 மே 1982, திருத்தந்தை 2 ஆம் ஜான்பவுல்

இவர் பார்சிலோனாவில் இருந்த புனித கப்புச்சின் துறவற சபையில் தனது 17 ஆம் வயதில் துறவற வார்த்தைப்பாடுகளைப் பெற்றார். தான் துறவியான 8 ஆண்டுகள் கழித்து, சரகோசா (Saragossa) என்ற ஊரில் துறவற மடம் ஒன்றைக்கட்டினார். அதன்பிறகு அவ்வில்லத்திற்கு தானே தலைமை பொறுப்பையும் ஏற்றார். ஞானத்தாலும், அறிவாலும் சிறந்து விளங்கி தன் மடத்தை வழிநடத்தினார். அதன்பின் அச்சபையை ஸ்பெயின் நாட்டில் முர்சியா (Murcia) என்ற இடத்திலும் நிறுவினார். இவர் அம்மடத்திலிருந்தபோது எண்ணிலடங்கா இயேசுவின் திருக்காட்சிகளை பெற்றார். அவைகளை தானே தன் கைப்பட எழுதியும் வைத்தார். இவர் முர்சியா ஊரிலிருந்த ஆலயங்களில் செப வழிபாட்டை நடத்தி, அவைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.


செபம்:
புதுமைகளை செய்பவரே எம் கடவுளே! புனித கப்புச்சின் சபை துறவிகளையும், குருக்களையும் ஆசீர்வதித்தருளும். அவர்களோடு எச்சூழலிலும் உடனிருந்து காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2015-12-01 அரசி பிளாங்கா Blanca

                               

பிறப்பு4 மார்ச்,1188,கஸ்டீலியன் Kastilien,ஸ்பெயின்

இறப்பு26 (அ) 27 நவம்பர்,1252,மவ்பூயிஸ்சன் Maubuisson,பிரான்சு

வர் கஸ்டீலியின் நாட்டு அரசர் 9ஆம் லூட்விக் / லூயிஸ் (Ludwig IX) என்பவரின் மகள். இவர் தனது12ஆம் வயதிலேயே பிரான்சு நாட்டு அரசர் 8 ஆம் லூட்விக் என்பவரை மணந்தார். 1226ல் கணவர் இறந்து போகவே, தன் மகனை ஆட்சிப்பொறுப்பை ஏற்கவைத்தார். மகன் 11 வயது மட்டுமே நிறைந்த இளைஞராக இருந்ததால் நாட்டை ஆட்சி செய்வதற்கு தன் மகனுக்கு வழிகாட்டி, கற்றுக்கொடுத்தார். தானே முன்னின்று ஆட்சி செய்யும் அளவுக்கு தன் மகனை வளர்த்தெடுத்தார். இதன் பயனாக மகன் 9ஆம் லூட்விக் 1236 ல் முழு ஆட்சிப்பொறுப்பையும் ஏற்றார். இருப்பினும் பிளாங்கா ஆட்சிபுரிவதோடு தன் மகனை இறையுறவிலும் வளர்த்தார்.

இவர் ஸ்பெயின் நாட்டில் வசித்த ஏழை மக்களுக்கு தன் மகனின் ஆட்சியிலிருந்து பெருமளவு தொகையை ஒதுக்கி ஏழைகளின் வாழ்வை ஈடேற்றினார். நோயாளிகளை பராமரிப்பதற்கென்று பல மருத்துவமனைகளை கட்டினார். இறைவனின் காரியங்களில் அக்கறைக்கொண்ட இவர், நாடு முழுவதிலும் ஆலயங்களையும் துறவிகளுக்கென்று பல துறவற மடங்களையும் கட்டி எழுப்பினார். தன் மகனின் ஆட்சியில் கிறிஸ்துவுக்கென்று தனி இடத்தை ஒதுக்கினார்.

1248ல் தன் மகன் 9ஆம் லூட்விக் ஆறாம் சிலுவைப்போரைத் தொடர்ந்தார். இதனால் மகனின் ஆட்சிப்பொறுப்பை பிளாங்கா ஏற்றார். அப்போதுதான் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்டு இறந்தார்.


செபம்:
எங்கள் அன்பான ஆண்டவரே! உம் அன்னை உம்மோடு உமது இறுதி சாவு வரை உடனிருந்து வழிநடத்தியதைப்போல அரசி பிளாங்காவையும் தன் மகனுக்கு உதவி செய்ய வழிகாட்டினீர். உமது அன்பான பராமரிப்பினால் எம் தாய்மார்களையும் ஆசீர்வதித்து, இறுதிவரை உடனிருந்து தன் பிள்ளைகளுக்கு உதவிட வரம் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Monday, 30 November 2015

இன்றைய புனிதர் 2015-11-30 திருத்தூதர் அந்திரேயா Apostel Andreas

                                         

பிறப்புகிறிஸ்து பிறந்த ஆண்டு,பெத்சயிதா, கலிலேயா

இறப்புநவம்பர் 60 அல்லது 62,பாட்ரஸ் Patras, கிரேக்கம்

பாதுகாவல்: ஸ்காட்லாந்து, ரஷ்யா, ஸ்பெயின், கிரேக்கம், சிசிலி, ஆஸ்திரியா, பெரு, நேயாப்பல், மீன்பிடிப்பவர்கள், திருமண தம்பதியர், தொண்டைவலியிலிருந்து, வலிப்பு நோயிலிருந்து

இவர் தன் சகோதரர் சீமோனுடன் வாழ்ந்து வந்தார். இவர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தார். பின்னர் திருமுழுக்கு யோவானின் சீடராயிருந்தார். அதன்பிறகு கிறிஸ்துவை பின்பற்றினார். இதனால் இவர் இயேசுவால் அழைக்கப்பட்ட முதல் சீடர் என்ற பெயரைப் பெற்றார். இவரே தன் சகோதரர் சீமோன் பேதுருவையும் இயேசுவிடம் அழைத்துவந்தார். என்னை பின் சென்று மனிதரை பிடிப்பவராகுங்கள் என்று இயேசு இவர்களிடம் கூறி தன் சீடராக்கினார். நற்செய்தி அறிவிக்கும் பணியை இயேசுவிடமிருந்து பெற்றிருந்தார்.

இவர் கருங்கடல் வழியாக சென்று கிரேக்க நாட்டில் நற்செய்தியை போதித்தார். சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து மறைப்பணியாற்றினார். பாட்ரசில் நற்செய்தியை உரைக்கும்போது எதிரிகளால் பிடிக்கப்பட்டார். ஏறக்குறைய 60 ஆம் ஆண்டு மன்னன் நீரோ ஆட்சிபுரிந்தான். அவன் அந்திரேயாவை நற்செய்தியை பறைசாற்றியதற்காக சிலுவையில் அறைந்து கொன்றான் என்று கூறப்படுகின்றது.


செபம்:
மாட்சிமிக்க ஆண்டவராகிய கடவுளே! உமது திருத்தூதரான புனித அந்திரேயாவை நற்செய்தியை போதிக்கவும் உமது திருச்சபையை வழிநடத்தவும் அழைத்தீர். அவர் எங்களுக்காக எப்பொழுதும் பரிந்து பேசுபவராக திகழ நாங்கள் உம்மை தாழ்மையாய் வேண்டுகின்றோம்

Sunday, 29 November 2015

இன்றைய புனிதர் 2015-11-29 தூலூஸ் ஆயர் சட்டுர்னினுஸ் Saturninus von Toulouse

                      

பிறப்பு2 ஆம் நூற்றாண்டு

இறப்பு250, தூலூஸ்,பிரான்சு

பாதுகாவல்: தூலூஸ் நகர், தலைவலியிருந்து, சாவு பயத்திலிருந்து
இவர் மிக பெரிய மரியாதைக்குரிய மனிதராக திகழ்ந்தார். இவர் 236-250 ஆம் ஆண்டுவரை திருத்தந்தை பபியான் Fabian அவர்களால் மறைப்பரப்பு பணியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர். இவர் ஓர் சிறந்த மறைபரப்பு பணியாளர். இவர் காலியன் Gallien என்ற நகருக்கு கைதியாக கொண்டு போகப்பட்டார். இவர் தனது மறைபரப்பு பணியின்போது பலரை மனந்திருப்பி, திருமுழுக்குக்கொடுத்து பணியாற்றியுள்ளார். நற்செய்தியை பரப்புவதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டுள்ளார். கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தவர். இதனால் திருத்தந்தை பபியான் இவரை தூலூஸ் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுத்தார். இவர் தூலூஸ் நகரின் "முதல் ஆயர்" என்ற பெருமைக்குரியவர். இவர் மறைப்பணிக்காக செல்லும்போது, காட்டுவிலங்கு ஒன்று இவரை கடித்துக்கொன்றது என்று கூறப்படுகின்றது.


செபம்:
இரக்கமே உருவான இறைவா! தூலூஸ் நகர் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உம் நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வாழ ஊக்கமூட்டியருளும். கிறிஸ்துவ மக்கள் ஒவ்வொருவரும் உமது நெறியில் வாழ்ந்து தொடர்ந்து உம் அன்பை சுவைக்க வரம் தாரும்.

Friday, 27 November 2015

இன்றைய புனிதர் 2015-11-28 துறவி யாக்கோபுஸ் டி மார்கியா Jacobus de marchia OFM

                                       

பிறப்பு1400,மோண்டேப்ராண்டோனே Monte Prandone, இத்தாலி

இறப்பு28 நவம்பர் 1476,நேயாப்பல், இத்தாலி

புனிதர்பட்டம்: 10 டிசம்பர் 1726, திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்
இவர் சியென்னா நகர் (Siena) பெர்ன்ஹார்டின் Bernhardin மாண bவர். இவர் திருச்சபையை பற்றி தவறாக போதித்த வர்களுக்கு எதிராக மிக அருமையாக சொற்பொழிவாற்றி மறைப்பணியா ற்றினார். இத்தாலி முழுவதிலுமிருந்த பிற இனப் பிரிவினை சபைகளின் போதனைகளை எதிர்த்து கிறிஸ்துவ மறையை வளர்த்தார். 1437 ஆம் ஆண்டு ஹங்கேரி மற்றும் போய்மன் (Böhmen) நாடுகளுக்கு சென்று மறைப்பணியாற்றினார். இவர் தான் போதித்தவைகளை பற்றி கடிதங்களை எழுதியுள்ளார். பிரான்சிஸ்கன் சபையில் சிறந்த மறைப்போதனையாளர்களில் இவரும் ஒருவராவார்.

செபம்:
படைப்புகளை பராமரித்தாளும் பரம்பொருளே எம் இறைவா! இன்றைய இப்புனிதரின் விழாவை சிறப்பிக்கும் ஒவ்வொரு உள்ளங்களையும் ஆசிர்வதியும். சிறப்பாக புனித பிரான்சிஸ்கன் சபைத் துறவிகளை ஆசீர்வதித்து, பாதுகாத்து பராமரித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2015-11-27 ஆல்ட்முயூன்ஸ்டர் நகர் துறவி பில்ஹில்டிஸ் Bilhildis von Altmünster


பிறப்பு7 ஆம் நூற்றாண்டு,பவேரியா


இறப்பு734,மைன்ஸ் Mainz, Germany

இவரைப்பற்றிய வரலாறு அதிகம் அறியப்படவில்லை. இவர் இளம் வயதிலேயே திருமணம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகின்றது. தூரின் நாட்டு அரசர் முதல் ஹெட்டான் (Hetan I) என்பவர் இவரின் கணவர். பில்ஹில்டிஸ் தன் கணவரையும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் மனந்திருப்பி, கிறிஸ்துவ மறையை பின்பற்றச் செய்தார். என்று சொல்லப்படுகின்றது. பில்ஹில்டிஸின் கணவர் இறந்தபிறகு விதவையான இவர் தன் மாமா பேராயராக இருந்ததால் பல விதங்களிலும் அவருக்கு உதவி செய்துள்ளார்.

பின்னர் ஆல்ட்முயூன்ஸ்டர் சென்று அங்கு ஒரு துறவற மடத்தில் சேர்ந்து பல நாட்கள் கழித்து துறவியானார் என்று கூறப்படுகின்றது. இவர் இறக்கும் வரை மிகப் பக்தியுள்ள சிறந்த துறவியாக வாழ்ந்துள்ளார். இவர் இறந்தபிறகு எங்கு புதைக்கப்பட்டார் என்று கண்டறிய இயலவில்லை.


செபம்:
உயிரளிக்கும் இறைவா! துறவியான பில்ஹில்டிஸின் வழியாக நீர் எம் திருச்சபைக்கு ஆற்றிய நன்மைக்களுக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். இன்றைய உலகில் வாழும் அரசர் குடும்பங்களை ஆசீர்வதித்து நீர் தொடர்ந்து வழிநடத்தியருள வேண்டுமென்று தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.

Thursday, 26 November 2015

இன்றைய புனிதர் 2015-11-26 மறைப்பணியாளர் லியோனார்டு, போர்டோ மவுரிஷியோ நகர் Leonhard von Porto Maurizio OFM

பிறப்பு20 டிசம்பர் 1676, போர்டோ மவுரிஷியோ, இத்தாலி

இறப்பு26 நவம்பர் 1751,உரோம்

முத்திபேறுபட்டம்: 26 நவம்பர் 1796புனிதர்பட்டம்: 29 ஜூன் 1867, திருத்தந்தை 9 ஆம் பயஸ் மறைப்பணியாளர்களின் பாதுகாவலராக: 1923, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பாதுகாவல்: மறைப்பணியாளர்கள்

இவர் இத்தாலி நாட்டின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டார். இவர் தான் குருப்பட்டம் பெற்றபின் மறைப்பரப்பு பணியாளராக செயல்பட்டார். பயணங்கள் பல மேற்கொண்டு, ஊர் ஊராக சென்று மறையுரையாற்றினார். இவரின் மறையுரையால் பலர் கவர்ந்து, இவரை தொடர்ந்தனர். அனைத்து வித மக்களும் எளிமையாக புரிந்துகொள்ளும் விதத்தில் மறையுரை ஆற்றும் திறமையை பெற்றிருந்தார். இயேசுவின் நற்செய்தியை மிக எளிய முறையில் அறிவித்தார்.

இவர் 1697 ஆம் ஆண்டு புனித பிரான்சு அசிசியின் சபையில் சேர்ந்து பணியாற்றினார். அன்னை மரியாளுக்கு வணக்கத்தையும், சிலுவைப்பாதை வழிபாடுகளையும், எளிமையான முறையில் வழிநடத்தி அனைத்து மக்களையும் இறையுணர்வை கொண்டு வாழ செய்தார். இவர் இத்தாலியில் மட்டுமே 600 முறை சிலுவைப்பாதையை வழிநடத்தியுள்ளார். இவர் மருத்துவப்படிப்பையும் தத்துவயியலையும் கற்றிருந்தபோதும் கூட எளிமையாக வாழ்ந்து நற்செய்திக்கு சான்று பகிர்ந்தார்.


செபம்:
இயேசுவே இதயத்தின் ஒளிவிளக்கே! உம் வார்த்தைகளை நாங்கள் நாளும் படிக்கவும் வாசிப்பதோடு மட்டும் விட்டுவிடாமல் அவை காட்டும் வழியில் சென்று, உம்மில் எம் வாழ்வை செம்மையாக்கி, சீர்படுத்தி வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று தூய ஆவியின் வழியாக புனித லியோனார்டின் பரிந்துரையை பெற உதவியருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, 25 November 2015

இன்றைய புனிதர் 2015-11-25 கர்தினால் சார்லஸ் மார்டியல் அல்லெமாண்ட் லவிகேரீ Charles-Martial-Allemand Lavigerie


பிறப்பு31 அக்டோபர் 1825,பயோன்னே Bayonne, பிரான்சு


இறப்பு25 நவம்பர் 1892,அல்ஜீரியா

இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பேராசிரியராக பணியாற்றினார். 1863 ஆம் ஆண்டு நான்சி (Nancy)என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1867 ல் அல்ஜீரியாவிற்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1882 ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பின்னர் ஆப்ரிக்காவில் மறைபரப்புப் பணியை ஆற்றச் சென்றார். பின்னர் 1886 ல் "வெள்ளை அருள்தந்தையர்" (Weißen Vater) என்ற பெயரிலும் "வெள்ளை அருள்சகோதரிகள்" (Weißen Schwestern) என்ற பெயரிலும் சபை ஒன்றை நிறுவினார்.

இவர் ஆப்ரிக்காவில் முஸ்லீம் இன மக்களிடையே தன் மறைபரப்பு பணியை ஆற்றினார். ஆப்ரிக்காவின் பல்வேறு நகரங்களில் மறைபரப்பு மையங்களை நிறுவினார். பின்னர் மால்டாவில் Malta மறைக்கல்வி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். பின்னர் 12 நவம்பர் 1890 ல் மறைப்பணீயை பரப்புவதற்காக அல்ஜீரியாவிற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு இவர் கார்த்தாகோவில் Karthago இருந்த பேராலயத்தில் பணிபுரிந்துவந்தார். பல இளைய பெண்களுக்கு வழிகாட்டி துறவியாக்கினார்.


செபம்:
நிறைவாழ்வளிக்கும் இறைவா! கர்தினால் சார்லசை நீர் படிப்படியாக உயர்த்தினீர். திருச்சபையின் வளர்ச்சிக்காக பல வித்தியாசமான முறையில் மறைப்பணியாற்றிய இவரைப்போல, ஒவ்வொரு மறைப்பணியாளர்களும் சிறப்பாக உம் சேவையில் ஈடுபட வரம்தந்து காத்து ஆசீர்வதித்து, வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Tuesday, 24 November 2015

இன்றைய புனிதர் 2015-11-24 மறைசாட்சி கிறிசோகோனுஸ் Chrysogonus


பிறப்பு3 ஆம் நூற்றாண்டு,உரோம், இத்தாலி


இறப்பு303அக்குயிலேயா Aquileja, இத்தாலி

இவர் ஓர் சிறந்த கத்தோலிக்கர். ஏறக்குறைய 300 ஆம் ஆண்டு அரசி அனஸ்தாசியாவின் (Anastasia)ஆசிரியராக பணியாற்றினார். இவர் எப்போதும் கிறிஸ்துவை பின்பற்றி வாழ்ந்தார். இதனால் தியோக்ளேசியன்(Diokletion) என்ற அரசனால் வதைக்கப்பட்டார். பின்னர் அக்குயிலேயாவிற்கு பிடித்துகொண்டு போகப்பட்டார். அங்கு அவரின் நம்பிக்கையை அரசன் தியோக்ளேசியன் சோதித்தார். கிறிஸ்துவை பின்பற்ற தடைவிதித்தான். ஆனால் அனைத்து தடைகளையும் மீறி கிறிசோனோலுஸ் கிறிஸ்துவை பின்பற்றினார். இதனால் அரசன் சினங்கொண்டு அவரை கொன்றான்

செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான இறைவ! உம்மை பின்பற்றியதற்காக தன் உயிரை ஈந்த கிறிசோகோனுஸ்சின் பக்தியையும், விசுவாசத்தையும் நாங்களும் பின்பற்றி வாழ எமக்கு உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Monday, 23 November 2015

இன்றைய புனிதர் 2015-11-23 துறவி கொலும்பான் Kolumban


பிறப்பு542,லைன்ஸ்டர் Leinster, அயர்லாந்து


இறப்பு23 நவம்பர் 615,போபியோ Bobbio, இத்தாலி

பாதுகாவல்: அயர்லாந்து, போப்பியோ, தீய ஆவியிடமிருந்து
இவர் தன் வயதில் துறவற மடத்தில் சேர்ந்து துறவு வாழ்வை மேற்கொண்டார். 560 ஆம் ஆண்டில் பாங்கோர்(Bangor) என்ற நகரில் துறவற சபை ஒன்றை நிறுவினார். பின்னர் இச்சபையை கொலும்பான் சிறந்த முறையில் வளர்த்தெடுத்தார். ஏறக்குறைய 30 ஆண்டுகள் இவர் பல்வேறு துறையில் பணியாற்றினார். நீண்ட காலம் ஆசிரியராகவும் இருந்தார். இவர் 590 ஆம் ஆண்டு தன்னுடன் 30 ஆண் துறவிகளை அழைத்துக்கொண்டு பாங்கோர் விட்டு வெளியேறி இங்கிலாந்திற்கு சென்றார். அங்கு போர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று மீண்டும் துறவற சபை ஒன்றை நிறுவினார்.

இங்கிலாந்தில் புதிய சபைக்காக துன்பங்கள் பலவற்றை சுமந்தார். இருப்பினும் மனந்தளராமல் சிறந்த மறையுரையை ஆற்றி, பல இளைஞர்களை இறைவன்பால் ஈர்த்தார். அதன்பிறகு லுக்செயுல் (Luxeuil) என்ற இடத்தில் பல இளைஞர்களைக் கொண்டு மீண்டுமோர் துறவற சபையை தொடங்கினார். இவர் தான் சென்ற இடமெல்லாம் அந்நகரின் கலாச்சாரத்திற்கேற்றவாறு துறவற சபைகளின் ஒழுங்குகளை அமைத்துக்கொடுத்தார். மிக குறைந்த ஆண்டுகள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இவரின் சபையில் சேர்ந்து இறைப்பணியாற்றினர்.

இவர் தொடங்கிய சபைகள் நன்கு வளர்ச்சியடைந்தபின் புனித பெனடிக்ட் துறவற சபையின் ஒழுங்குகளை தான் தொடங்கிய அனைத்து சபைகளிலும் கடைபிடித்து வாழ வழிவகுத்துக் கொடுத்தார். தான் நிறுவிய துறவற சபைகளுக்காக கொலும்பான் அயராது உழைத்தார். அதன்பிறகு 613 ஆம் ஆண்டு நோயால் தாக்கப்பட்டார். இருப்பினும் தன் உடல் நோயைப்பற்றி கவலை கொள்ளாமல் ஜெர்மனியிலுள்ள போடன் சே(Boden See) வந்தடைந்தார். அங்கு சில காலம் மறைப்பணியாற்றியபின் தன்னுடன் அவரின் சபை சகோதரர் ஒருவரை அழைத்துக்கொண்டு இத்தாலி நாட்டிற்கு சென்று போபியோவில் மீண்டும் சபையை தொடங்கினார். இத்துறவற சபையே இவர் நிறுவிய கடைசி சபையானது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் அங்கு வாழ்ந்தபின் காலமானார். மறைநூல்களையும் பண்டைய இலக்கியங்களையும் கற்றுத்தேர்ந்த இவர் தான் நிறுவிய சபைகளை இறைவனின் மகிமைக்காக அயராது உழைத்து உயர்த்தினார். கிறிஸ்துவ வாழ்விக்கும், துறவற வாழ்வுக்கும் மிகவும் பாராட்டபெற்றவராய் திகழ்ந்தார்.


செபம்:
என்றும் வாழ்பவரே எம் தந்தையே! நற்செய்தி பணியின்மீதும் துறவற வாழ்வின்மீதும் புனித கொலும்பானின் இதயத்தில் பேரார்வத்தை வியத்தகு முறையில் வளர்த்தெடுத்தீர். அவருடைய இறைவேண்டுதலாலும், முன்மாதிரிகையாலும் நாங்கள் யாவற்றுக்கும் மேலாக உம்மையே தேடுவதிலும் நம்பிக்கையுள்ள சமூகத்தை வளர்ப்பதிலும் கருத்துள்ளவர்களாய் இருக்கசெய்தருளும்.

Sunday, 22 November 2015

இன்றைய புனிதர் 2015-11-22 மறைசாட்சி செசிலியா



பிறப்பு200,உரோம், இத்தாலி


இறப்பு22 நவம்பர் 230,உரோம்

பாதுகாவல்: இசைக்கருவி தயாரிப்பவர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள்
இவர் ஓர் ரோமன் கத்தோலிக்க உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவுக்காக வாழ வேண்டுமென்று விரும்பியவர். இவர் தனது மனதிற்குள் இறைவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, இயேசுவை தன் கணவராக நினைத்து வாழ்ந்தார். ஆனால் இவரின் பெற்றோர் செசிலியாவை வலேரியானூஸ் என்ற இளைஞர்க்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். ஆனால் அவைகளை செசிலியா பெரியதாக கருதாமல் தன்னுடைய ஆன்மீக காரியங்களில் மட்டுமே கருத்தாக இருந்தார். வலேரியானூஸ்சுடன் திருமணம் செய்ய இருப்பதை வெறுத்தார். இருப்பினும் பெற்றோரை எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்தார்.

இவர்தான் திருமணம் செய்யும் நாள் வந்தது. இவரின் பெற்றோர் இவருக்கு திருமண உடையை அணிந்தபோது இதயம் வலித்தவராய், தன்னை முழுவதும் தன் மணவாளன் இயேசுவிடம் ஒப்படைத்து செபித்தார். கணவரிடம் பெற்றோர் இவரை ஒப்படைத்தபோது, தான் கடவுளிடம் கொடுத்த கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை உன்னிடம் இழக்கமாட்டேன் என்று உறுதியாக தெளிவாக கூறினார். தான் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவள் என்பதை தைரியமாக எடுத்துக்கூறினார்.

வலேரியானூஸ், செசிலியா சொல்வது உண்மையா என்பதை சோதிக்கும் நோக்குடன் கடவுளின் தூதர் ஒருவரை தன்னிடம் பேசுமாறு கூறினார். செசிலியா அதை நிரூபிக்க வலேரியானூஸ் முதலில் திருத்தந்தையிடம் திருமுழுக்குப் பெறுமாறு கூறினார். செசிலியாவின் வார்த்தைகளுக்கு படிந்து அவரும் திருமுழுக்கு பெற்றார். அவர் திருமுழுக்கு பெற்ற நாளன்றே வானதூதர் ஒருவர் அவர் முன்னின்று ரோஜா மலர் ஒன்றை கொடுத்து அவரை வாழ்த்தினார். அதன்பின்னர் வலேரியானூஸ் செசிலியாவை அவரின் விருப்பப்படி வாழ விட்டுவிட்டார். செசிலியாவை நம்பினார். வலேரியானூஸ் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கத்தோலிக்க திருச்சபைக்கு மனமாற்றினார். அவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்ற நாளிலிருந்து செசிலியாவிற்கு பணிந்து இரவும் பகலும் அவருக்கு பணிவிடைபுரிந்தனர்.

செசிலியா தான் மணந்த வலேரியானூசின் உதவியுடன் கடவுளின் அன்பை சுவைத்து வாழ்ந்தார். ஏழைகளின் மீது இரக்கம் காட்டி, அனைவரையும் சமமாக அன்புச் செய்தார். இறைவனை இரவும் பகலும் பாடல்களால் போற்றி புகழ்ந்தார். இவரின் பக்தியை கண்ட எதிரிகள் கொதிக்கும் சூடான நீரில் அவரை மூழ்கடித்து அக்கொடியவர்களின் ஆசைத் தீர அணுஅணுவாக கொன்றனர். கொதிக்கும் சூடான நீரில் இவர் மூன்று நாள் எத்தீக்காயமும் இல்லாமல் உயிருடனே இருந்தார். இவர் கிறிஸ்துவ பெண்கள் அனைவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். கிறிஸ்துவின் மீது கொண்ட அன்புக்காக கன்னிமை காத்து வாழ்ந்தார். அவருக்காக மறைசாட்சியாகவும் மரித்தார்.


செபம்:
ஆண்டவராகிய கடவுளே! புனித செசிலியாவின் திருநாளை சிறப்பிக்கும் இவ்வினிய வேளையில் உம்மை நோக்கி எழும் எங்கள் மன்றாட்டுகளுக்கு தயவாய் செவிசாய்த்தருளும். இப்புனிதரின் வேண்டுதலால் எங்கள்மீது இரங்கி நாங்கள் கேட்கும் வரங்களை தந்தருளும்.

Saturday, 21 November 2015

இன்றைய புனிதர் 2015-11-21 திருத்தந்தை முதலாம் கெலாசியுஸ் Pope Gelasius I


பிறப்பு5 ஆம் நூற்றாண்டு,ஆப்ரிக்கா(?)


இறப்பு 21 நவம்பர் 496, உரோம் இத்தாலி

இவர் ஆப்ரிக்கா நாட்டு கறுப்பினத்தைச் சார்ந்தவர். இவர் மிக சிறு வயதில் குருவானார் என்று கூறப்படுகின்றது. 483 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தை 2 ஆம் பெலிக்ஸ்சுக்கு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இவர் மிக சிறந்த விதத்தில் திருத்தந்தைக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வழிகாட்டியுள்ளார். திறமையான, அர்த்தமுள்ள முடிவுகள் எடுப்பதில் இவர் வல்லவராக திகழ்ந்தார். இறையியலாளர்கள் பலர் இவரின் ஆலோசனையை நாடி வந்தனர். திருத்தந்தை 2 ஆம் பெலிக்ஸ் 1 மார்ச் 492 ஆம் ஆண்டு இறந்துவிடவே கெலாசியுஸ் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தழைத்தோங்கி இருந்த அரசர்களின் ஆட்சியை முறியடித்து திருச்சபையில் கடவுளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். கிறிஸ்துவின் நற்செய்திக்கு முதலிடம் கொடுத்தார். ஏழை மக்களின் வாழ்வுக்கென்று பல மையங்களை ஏற்படுத்தினார். திருச்சபை சொத்துகளில் நான்கில் ஒரு பகுதியை ஏழைகளுக்குப் பகிர்ந்துக் கொடுத்தார். இவர்தான் வாழ்ந்து வளர்ந்த ஏழ்மையை என்றும் மறவாமல் இறுதிவரை வாழ்ந்தார். ஏழைகளுக்கென்று தன் ஆட்சியில் தனி இடம் ஒதுக்கினார். அம்மக்களின் ஈடேற்றத்திற்காக இரவும் பகலும் அயராது செபித்தார். இயேசு வாழக்கூறிய அன்பான வாழ்வை வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். இவர் திருச்சபையில் பல சீர்த்திருத்தங்கலை கொண்டுவந்தார். இவர் திருப்பலி பூசை புத்தகத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். இவர் இறந்தபிறகு உடல் எங்கு புதைக்கப்பட்டது என்பதை கண்டறிய இயலவில்லை.


செபம்:
அனைவருக்கும் இரக்கம் காட்டும் அன்புத் தந்தையே! திருச்சபையின் தலைசிறந்த மனிதராக திருத்தந்தை முதலாம் கெலாசியுஸை மாற்றினீர். இவரின் வேண்டுதலால் நாங்கள் எங்களுடைய திறமைகளை பயன்படுத்தி என்றும் எம் தாயாம் திருச்சபையின் வளர்ச்சிக்காக உழைத்திட வரமருள வேண்டுமென்று தந்தையே இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

Friday, 20 November 2015

இன்றைய புனிதர் 2015-11-20 வாலோய்ஸ் நகர் பெலிக்ஸ் Felix von Valois


பிறப்பு1127,வாலோய்ஸ், பிரான்சு


இறப்பு1212,பாரிஸ், பிரான்சு

இவர் மிக மதிப்புமிக்க அரசரின் குடும்பத்தில் மகனாக பிறந்தவர். தனது கல்வியை முடித்தபிறகு குருப்பட்டம் பெற்றார். குருவான பிறகு தனிமையாக வாழ்ந்து கடுமையான ஏழ்மையை கடைபிடித்தார். இவர் காட்டில் வாழும் துறவிகளை போல, அனைத்தையும் துறந்து வாழ வேண்டுமென்பதை விரும்பினார். சில ஆண்டுகள் கழித்து இளமையான மருத்துவர் ஒருவர் பாரிசிலிருந்து சென்று பெலிக்சை சந்தித்தார். அவர் பெலிக்ஸ் வாழும் வாழ்வை தானும் வாழ விரும்பி குருப்பட்டம்பெற்றார்.

இவர்கள் இருவரும் தனிமையாக சென்று கடுந்தவம்புரிந்து இறைவேண்டலில் ஈடுபட்டனர். இவர்களிடையே நல்ல புரிதல் இருந்தது. இருவரும் ஒரே மனநிலை கொண்டவராக திகழ்ந்தனர். ஒன்று சேர்ந்து பல பெரிய பெரிய காரியங்களை செய்தனர். அச்சமயத்தில் விதவைகளும், கைவிடப்பட்டவர் களும் ஏராளமானோர் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களுக்கெல்லாம், இவர்கள் இருவரும் உதவி செய்தனர். தங்களின் முழு அன்பையும் அம்மக்களுடன் பகிர் ந்தனர். அம்மக்களுக்காக சபை ஒன்றையும் நிறுவினார். பல துன்பங்களை அனுபவித்தார். இருப்பினும் இறையருளால் தங் களின் பணியிலிருந்து சிறிதும் பின் வாங்காமல் தைரிய முடன் அச்சபையை வழிநடத்தினர். அச்சபையானது தொடங்க ப்பட்ட மிக குறுகிய காலத்தில் பிரான்சு நாடு முழுவதும் பரவி யது.  இவர் சிறந்ததோர் வரலாற்று மனிதராகப் புகழப் பட்டார். சிறிய மனிதராக இருந்தபோதும் ஆண்டவரின் பணியை பெரு மள வில் சிறப்பாக ஆற்றினர்.
செபம்:
நிறைவாழ்வளிக்கும் அன்புத் தந்தையே! தான் ஓர் அரசர் குடும் பத்தில் பிறந்தும் ஏழ்மையை தேர்ந்து உலகுக்கு சாட்சியாக வாழ்ந்த பெலிக்சை போல, நாங்கள் பெயருக்காகவும், புகழுக் காகவும் வாழாமல் உமது அன்பு பிள்ளைகளாக மட்டுமே வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.

Wednesday, 18 November 2015

இன்றைய புனிதர் 2015-11-19 தூரிங்கன் நகர் துறவி எலிசபெத் Elisabeth von Thüringen

பிறப்பு1207,பிரேஸ்பூர்க்Preßburg, ஹங்கேரி(?)

இறப்பு17 நவம்பர் 1231,மார்பூர்க் Marburg, ஜெர்மனி

புனிதர்பட்டம்: 27 மே 1235, திருத்தந்தை 9 ஆம் கிரகோரி
பாதுகாவல்: ஹெஸ்ஸன் Hessen, தூரிங்கன் நகர், காரிதாஸ் நிறுவனங்கள், விதவைகள், கைவிடப்பட்டவர்கள், நோயாளிகள், தேவையிலிருப்போர்

இவர் ஹங்கேரி நாட்டு அரசர் 2 ஆம் அந்திரேயாஸ் என்பவரின் மகளாக பிறந்தார். அரசர் 4 ஆம் லூட்விக்(Ludwig IV) என்பவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். இவருக்கு 3 குழந்தைகள் பிறந்தது. பிறகு தன் கணவர் 1227 ல் இறந்துவிட்டார். அச்சமயத்தில் அரசர் 2 ஆம் பிரடரிக் Friedrich II சிலுவைப்போரை தொடர்ந்தான். அப்போது ஏழைகள் பலர் கைவிடப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டனர். எலிசபெத் ஏழைகளின் மேல் இரக்கம் காட்டி உணவு மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறைக் காட்டினார். இதனால் தன் கணவருடன் பிறந்த சகோதரர் ஹென்றி என்பவரால் காயப்படுத்தப்பட்டார். அச்சகோதரர் எப்போதும் எலிசபெத்தை வஞ்சித்து கொண்டே இருந்தார்.

இருப்பினும் எலிசபெத் ஏழைகளுக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருந்தார். விண்ணக காரியங்களைப் பற்றி சிந்திப்பதில் வேரூன்றிருந்தார். ஏழ்மையான வாழ்வை தேர்ந்துக்கொண்டார். ஹென்றியின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தது. இதனால் மனமுடைந்த எலிசபெத் தன் ஆன்மீக வழிகாட்டியாக இருந்த கான்ராட்Konrad குருவிடம் ஆலோசனை பெற்று, வீட்டைவிட்டு வெளியேறினார். 20 வயதான எலிசபெத் ஹெஸ்ஸனில் உள்ள மார்பூர்கில் மருத்துவமனை ஒன்றை கட்டினார்.

அவர் அம்மருத்துவமனையிலே நோயாளிகளை கவனித்து வந்தார். புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வை தன் வாழ்வாக வாழ்ந்தார். பின்னர் பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்து 1228 ஆம் ஆண்டு துறவற வார்த்தைப்பாடுகளை பெற்றார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்காகவே வாழ்ந்தார். தான் இறக்கும் வேளையில் கூட ஏழை ஒருவருக்கு உதவி செய்தார். இவரின் உடல் மார்பூக்கிலுள்ள பிரான்சிஸ் மருத்துவமனையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் கல்லறைமேல் இன்று பேராலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.


செபம்:
என்றென்றும் பேரன்பை நிலையாக கொண்டுள்ள தந்தையே! ஏழைகளில் கிறிஸ்துவை கண்டு பணிவிடை செய்ய ஹங்கேரி நாட்டை சேர்ந்த புனித எலிசபெத்துக்கு கற்றுக் கொடுத்தீர். இப்புனிதரின் வேண்டுதலால், நாங்கள் ஏழைகளுக்கும் துன்புறுவோர்க்கும் எந்நாளும் அன்பு தொண்டாற்ற அருள்புரியும்

இன்றைய புனிதர் 2015-11-18 குளுனி துறவி ஓடோ Odo von Cluny OSB


பிறப்பு 878, அக்குயிடானியன் Aquitanien, பிரான்சு


இறப்பு18 நவம்பர் 942,தூர்ஸ் Tours, பிரான்சு

பாதுகாவல்: மழைக்காக, பாடகர்கள்

இவர் ஓர் படைவீரரின் குடும்பத்தில் பிறந்தார். குளுனி சபையில் சேர்ந்து குருவானார். அச்சபையைத் தொடங்கிய பெர்னோ(Berno) என்பவரின் இறப்பிற்குப்பிறகு ஓடோ அச்சபையை பொறுப்பேற்று வழிநடத்தினார். இவர் சபைத்தலைவராக பொறுப்பேற்றபின்னர், ஏராளமானோர் அச்சபையில் சேர்ந்தனர். இவர் தன் பதவிகாலத்தில் 17 துறவற மடங்களைக் கட்டினார். தன் சபை குருக்கள் அனைவரும் இவரை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டனர். அந்தளவிற்கு இவர் மிக எளிமையான வாழ்வை செயல்பட்டனர்.

இவர் ஆலய இசைகளில் அன்புக்கொண்டிருந்தார். திருப்பலிப் பாடல்கள் பலவற்றை இவரே உருவாக்கினார். இவரால் உருவாக்கப்பட்ட பாடல்கள் இன்றுவரை திருச்சபையில் பாடப்பட்டு வருகின்றது. இவர் பிரான்சு நாட்டு மக்களால் "புகழ்பெற்ற இசைக்கலைஞர்" என்ற பட்டம் பெற்றார். இவர் இறந்தபிறகு இவரின் உடல் புனித ஜூலியன் கல்லறை அருகில் புதைக்கப்பட்டார்.


செபம்:
கலைகளின் கலைஞரே! பாடும் திறமையை ஓடோ அவர்களுக்குக் கொடுத்து தன் அழகிய குரலால் உம்மை போற்றி புகழ்ந்து வாழ்த்த வாய்ப்பளித்தீர். இன்றும் தான் பெற்ற அழகிய குரலைக்கொண்டு, உம்மை போற்றத் துடிக்கும் நண்பர்களை ஆசீர்வதியும். அவர்களின் திறமையை மேன்மேலும் வளர்த்து உம்மை மகிமைப்படுத்த செய்தருளும்.

Tuesday, 17 November 2015

இன்றைய புனிதர் 2015-11-17 ஹெல்ஃப்டா நகர் துறவி கெட்ரூட் Getrud von Helfta OC

பிறப்பு6 ஜனவரி 1256,ஐஸ்லேபன் Eisleben, தூரிங்கன் Thüringen

இறப்பு13 நவம்பர் 1302,ஹெல்ஃப்டா Helfta, சாக்சன்

பாதுகாவல்: பெரு நாடு

இவருக்கு 5 வயது நடக்கும்போதே, இவரின் பெற்றோர் கெட்ரூட்டை சிஸ்டர் சியன்சரின் (Zisterzienserin)துறவற மடத்தில் சேர்த்தனர். அங்கு அவர் ஜெர்மனி மொழியைக் கற்றுக்கொண்டு, தன் கல்வியை தொடர்ந்தார். ஆன்மீகக் காரியங்களில் அக்கறைக்கொண்டு வளர்ந்தார். இவர் ஜனவரி 27 ஆம் தேதி 1281 ஆம் ஆண்டு தனது 25 ஆம் வயதில் முதல் திருக்காட்சியை பெற்றார். அதன்பிறகும், பலமுறை திருக்காட்சியில் அளவில்லா கடவுளின் அன்பை சுவைத்தார். இவை அனைத்தையும் அவர் கடிதமாக எழுதியுள்ளார்.


இவர் இறைவன் ஒருவரையே தந்தையாகவும், தாயாகவும் எண்ணினார். தன் பெற்றோரிடம் பெறாத அன்பை, இறைவனிடம் பெற்றார். இயேசுவின் திரு இதயத்தைப்பற்றி இடைவிடாமல் எடுத்துரைத்தார். இவர் தான் இறக்கும் வரை இயேசுவின் திரு இருதய பிரார்த்தனையை தொடர்ந்து செபித்தார். இவர் இவ்வார்த்தைகளை தான் சாகும் தருவாயில் கூறிக்கொண்டே இருந்தார். "அன்பான கடவுளே உம் விருப்பம் போல் என்னை நடத்தும். உம் திட்டத்தின்படி வாழ எனக்கு வழிகாட்டும்" இறுதியாக இவ்வார்த்தைகளை உச்சரித்த வண்ணம் உயிர் நீத்தார்.


செபம்:
இயேசுவின் திருஇதயமே! எம் இதயத்தையும் உம் இதயத்திற்கு ஒத்ததாக செய்தருளும். துறவி கெட்ரூட்டை முன்மாதிரியாக கொண்டு, இதய இயேசுவின் அன்பு பிள்ளைகளாக வாழ, எம் வாழ்வை மாற்றியருளும். இயேசுவின் அன்பை சுவைத்து வாழ வழிகாட்டும்.

Monday, 16 November 2015

இன்றைய புனிதர் 2015-11-16 ஸ்காட்லாந்து அரசி மர்கரீட்டா Margareta von Scotland

இன்றைய புனிதர்

2015-11-16

ஸ்காட்லாந்து அரசி மர்கரீட்டா Margareta von Scotland


பிறப்பு1046,ரேஸ்கா Reska, ஹங்கேரி

இறப்பு16 நவம்பர் 1093,எடின்பூர்க் Edinburgh, ஸ்காட்லாந்து

பாதுகாவல்: ஸ்காட்லாந்த

இவர் இங்கிலாந்து நாட்டு அரசர் எட்வர்ட் அவர்களின் மகள். இவரின் தாய் ஆகத்தா (Agatha), ஹங்கேரி நாட்டு அரசி மர்கரீட்டா 1057 ஆம் ஆண்டிலிருந்து தன் மாமாவின் கண்காணிப்பில் இங்கிலாந்தில் வளர்ந்தார். 1066 ஆம் ஆண்டு இவரின் 20 ஆம் வயதில் ஸ்காட்லாந்திற்கு சென்றார். அங்குதான் அரசர் 3 ஆம் மால்கோம்(Malcolm)என்பவரிடம் பழகி, பின்னர் அவரையே திருமணம் செய்தார். தன் கணவர் அவரை கிறிஸ்துவ மறையை தழுவக்கூடாது என்று கட்டளையிட்டார். ஆனால் அவர் தன் கணவரின் பேச்சை மறுத்து மேலும் தன் கிறிஸ்துவ விசுவாசத்தில் வேரூன்றி இருந்தார்.

அரசி ஏழை மக்களின் வாழ்வில் அதிக அக்கறைக் கொண்டு வாழ்ந்தார். அவர்களுக்கு பலவிதங்களில் உதவினார். ஏழைகளை தன் இதயத்தில் சுமந்து உதவினார். ஏழை மக்களின் நலனிற்கென்று, நிறுவனம் ஒன்றையும் நிறுவி வேலை வாய்ப்புகளை வழங்கினார். தான் ஓர் அரசியாக இருந்தபோதும், துறவிகளைப் போலவே, ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். தவறாமல் நோன்பிலிருந்து செபித்து பல நலன்களை பெற்றார். பலவிதங்களிலும் ஒறுத்தல் செய்து வாழ்ந்தார்.


செபம்:
எல்லாம் வல்ல இறைவா! நீரே ஒளி. இருள் என்பது உம்மிடம் இல்லை. உமது பேரொளியினால் எங்கள் உள்ளங்களை நிரப்பியருளும். ஏழைமக்களின் மீது அன்பு கொண்டு, அரசி மர்கரீட்டா வாழ்ந்த வழியில் சென்று, நாங்கள் மகிழ்வுடன் உமது முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை உணர்ந்து வாழ செய்தருளும்.

Sunday, 15 November 2015

இன்றைய புனிதர் 2015-11-15 ஆயர் பெரிய ஆல்பர்ட் மறைவல்லுநர் Albert der Große


பிறப்பு1193(?),பவேரியா, ஜெர்மனி


இறப்பு15 நவம்பர் 1280,கொலோன் Köln

பாதுகாவல்: இறையியல் ஆசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள்,மலைவாழ் மக்கள்
இவர் குதிரைச்சவாரி கற்றுக்கொடுக்கும் பெற்றோரின் மகனாகப் பிறந்தார். பதுவையில் புனித தொமினிக்கன் சபைக்குச் சொந்தமான கல்லூரியில் படித்தார். படித்து முடித்தபின் 1223 ஆம் ஆண்டு அச்சபையில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு எண்ணிலடங்கா கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் பாரிசிலும், கொலோன் கல்லூரிகளிலும் பணியாற்றினார். இவர் 1248 ஆம் ஆண்டு கொலோன் நகரில் துறவற மடத்திற்கு சொந்தமாக கல்லூரி ஒன்றை கட்டினார். அக்கல்லூரியில் ஆன்மீகத்திற்கு வழிகாட்டும் விதமாக பலமுறை கருத்தரங்குகளை நடத்தினார்.

இவர் தன் சபையிலிருந்த மாநிலங்களில் ஒன்றிற்கு தலைமை பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் 1260 ஆம் ஆண்டு ரேகன்ஸ்பூர்க்கிற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை 11 ஆம் பயஸ் ஆல்பர்ட்டிற்கு திருச்சபையின் மறைவல்லுநர் என்ற பட்டத்தை 1931 ஆம் ஆண்டு வழங்கினார். ஆல்பர்ட் பல இடங்களில் மக்கள் இனங்களுக்கும் நகரங்களுக்கிடையிலும் அமைதியை நிலைநாட்டுவதற்கென்று அயராது பல முயற்சிகளை மேற்கொண்டார். இவர் இயற்கை அறிவு, மறை அறிவு வளர்ச்சிக்கான பல அரிய நூல்களையும் எழுதியுள்ளார்.


செபம்:
ஆண்டவராகிய கடவுளே! ஆயராம் புனித பெரிய ஆல்பர்ட் இவ்வுலக ஞானத்தையும், இறை நம்பிக்கையையும் இணைப்பதில் சிறந்து விளங்க செய்தீர். நாங்கள் நல்லாசிரியராகிய அவரது போதனைகளை ஏற்றுக்கொள்ளவும், ஒவ்வொரு அறிவியல் முன்னேற்றத்தின் வழியாக உம்மை அறிந்து, ஆழ்ந்து அன்பு செய்வதிலும் எங்களை இட்டுச் செல்லவும் அருள்புரியும்.

Friday, 13 November 2015

இன்றைய புனிதர் 2015-11-14 மறைசாட்சி நிக்கோலாஸ் டாவெலிக் மற்றும் அவரின் தோழர்கள் Nikolaus Tavelic und Gefährten OFM


பிறப்பு14 ஆம் நூற்றாண்டு,டால்மியா Dalmatien


இறப்பு14 நவம்பர் 1391,எருசலேம்

இவர் நவம்பர் 11 ஆம் நாள் 1970 ஆம் ஆண்டு தன் தோழர்களுடன், முகமதியர்களின் திருவிழாவின்போது அவர்களிடையே மறையுரையை ஆற்றினர். அச்சமயத்தில் சில யூதர்களால் இவர்கள் தாக்கப்பட்டார்கள். இவர்களுக்கு எவரும் பாதுகாப்பு கொடுப்பதற்கு முன் வராததால் எதிரிகளால் வதைக்கப்பட்டனர். இதையறிந்த அவர்களின் துறவற சபை சகோதரர்கள், அவர்களை காப்பாற்ற சென்றனர். இருப்பினும் அவர்களால் மறைசாட்சியர்களை காப்பாற்ற இயலவில்லை. எதிரிகள் நிக்கோலசையும் அவரின் தோழர்களையும் கைது செய்தனர். அவர்களின் கைகளில் விலங்குகளை மாட்டி தெருத்தெருவாக இழுத்து சென்று அடித்தனர்.

இவர்கள் 4 பேரையும் எதிரிகள் உணவின்றி பட்டினி போட்டனர். இருப்பினும் நான்கு பேரும், எதற்கும் அஞ்சாமல் கடவுளை போற்றி புகழ்ந்தனர். இடைவிடாமல் இறைவேண்டல் செய்தனர். இதனைக் கண்ட எதிரிகள் 4 பேரையும் கொல்லத் திட்டமிட்டனர். பின்னர் இவர்கள் நால்வரும் ஆழ்ந்த இறைவேண்டலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் பிடித்துக்கொண்டு போகப்பட்டு, உயிருடன் எதிர்த்துக் கொன்றனர். பின்னர் சுட்டெரித்த உடலின் சாம்பலை எருசலேம் முழுவதிலும் தூவினர்.


செபம்:
கருணைக் கடலாம் எம் தந்தையே! உம் பணியை ஆர்வமுடன் ஆற்றி, உமக்காக இறக்கும் பேற்றை இன்றைய புனிதர்களுக்கு கொடுத்தீர். தங்களின் இறுதிமூச்சுவரை உமக்காக வாழ்ந்த அவர்களின் வாழ்வை கண்டு, உமக்கு நன்றி கூறுகின்றோம். அப்புனிதர்களின் விசுவாசத்தை நாங்களும் எமதாக்கி வாழ, எம்மை தயாரித்திட வேண்டுமாய் தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2015-11-13 ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா, சேசு சபை Stanislaus Kostka SJ


பிறப்பு28 அக்டோபர் 1550,மசோவீன் Masovien, போலந்து



இறப்பு15 ஆகஸ்ட் 1568,உரோம், இத்தாலி

இவர் தனது பெற்றோரால் சரியான முறையில் கவனிக்கப்படாமல் இருந்தார். இவர் தன்னுடைய உடன் பிறந்த சகோதரருடன் 1564 ஆம் ஆண்டு, ஆஸ்திரியாவில் கல்லூரியில் படிப்பதற்காக அனுப்பப்பட்டார். அப்போது அவரின் வயது 14. தனது இளம்வயதிலேயே இயேசு தன்னுடன் உரையாடுவதை உணர்ந்தார். இயேசு தன்னை துறவற வாழ்வை வாழ அழைப்பதாக உணர்ந்ததால் துறவற இல்லம் ஒன்றை நாடி சென்றார். இதனால் அவரின் தந்தை கடுங்கோபம் கொண்டு, அவரை கண்டித்தார். இருப்பினும் இயேசுவின் குரலுக்கு மட்டுமே ஸ்தனிஸ்லாஸ் செவிமடுத்தார்.



இவர் 14 ஆம் வயதில் முதன்முறையாக பெற்ற திருக்காட்சியில் பிச்சைக்காரனைப்போல் உடை உடுத்தி, வியன்னாவைவிட்டு, ஆக்ஸ்பூர்க் வருமாறு கூறிய குரலைக்கேட்டார். அக்குரல் கூறியதை செய்ததின் பேரில் டில்லிங்கன் (Dillingen) வந்து சேர்ந்தார் ஸ்தனிஸ்லாஸ். அப்போது அவர் அங்கிருந்து உரோமில் உள்ள இயேசு சபை மடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு போர்ஜிய நகர் பிரான்சு (Franz von Borjia) அச்சபையின் தலைவராக இருந்தார். அவர் ஸ்தனிஸ்லாசை அவரின் 17 ஆம் பிறந்தநாளன்று தன் சபையில் நவத்துறவகத்தில் சேர்த்தார்.

ஸ்தனிஸ்லாஸ் மிகக் குறைந்த நாட்களிலேயே நவத்துறவக மாணவர்களாலும், குருக்களாலும் கவரப்பட்டு அன்புச் செய்யப்பட்டார். இவர் எப்போதும் மகிழ்ச்சியானவராகவும், உடனடியாக எதையும் எதிர்பாராமல் தேவையில் இருப்போருக்கு குறிப்பறிந்து உதவி செய்பவராகவும் இருந்தார். இவருக்கு மிக அருமையான எதிர்காலம் இருக்கும் என்று உடன் இருந்தவர்கள் அனைவரும் அவ்வப்போது கூறி வந்தனர். ஆனால் அனைத்தும் அதற்கு எதிர்மாறாக நடைப்பெற்றது. இவர் இயேசு சபையில் சேர்ந்த பத்தே மாதங்களில், கடுமையான காய்ச்சலால் தாக்கப்பட்டார். அக்காய்ச்சலை குணப்படுத்தமுடியாமல் இறந்து போனார். இவர் இறப்பதற்கு முந்தின நாள், நாளை நான் இறந்துவிடுவேன் என்பதை தன்னுடன் இருந்தவர்களை நோக்கி கூறினார். அவர் சொன்னவாறே ஆண்டவரிடத்தில் சேர்ந்தார்.


செபம்:
அருள் ஒவ்வொன்றின் ஊற்றாகிய இறைவா! புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்காவை, வியத்தகு முறையில் வளர்த்தெடுத்தீர். அவரின் நற்குணங்களை ஒவ்வொரு நவத்துறவு மாணவ மாணவிகளும் முன்மாதிரியாக கொண்டு வாழ உதவி செய்யும். நாங்கள் அவரின் தூய வாழ்வை பின்பற்ற தவறினாலும், அவரின் குணநலன்களையேனும் கண்டுபாவிக்க அவருடைய பரிந்துரை வழியாக எங்களுக்கு வரம் அருள்வீராக!